Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது போட்டியில் வங்கதேசம் அவுட்.. கடைசி ஓவரில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

கயானா: வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. அதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

West Indies sealed their first victory on second odi

முதலாவது போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டி கயானா வில் நேற்று பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 271 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ஹெர்மயர் அபாரமாக விளையாடி 121 ரன்களை குவித்தார். பவல் 44 ரன்களை எடுத்தார்.

வங்கதேச தரப்பில் ருபெல் ஹுசைன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்களையே எடுத்தது. இதன் மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. வங்கதேசம் தரப்பில் ரஹீம் அதிகபட்சமாக 68 ரன்களை எடுத்தார்.

கடைசி ஓவரில் 8 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில் வங்கதேச அணி 4 ரன்களை மட்டுமே எடுத்தது. மூன்றாவது மற்றும் தொடரின் வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி ஆட்டம் ஜூலை 28ஆம் தேதி நடைபெறுகிறது.

Story first published: Thursday, July 26, 2018, 19:02 [IST]
Other articles published on Jul 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+