வெஸ்ட் இண்டீஸ் அணியில் கடைசி நேர டுவிஸ்ட்… விலகிய அந்த அதிரடி நாயகன்..! இந்திய அணி ஏக குஷி..!!
Recommended Video
புளோரிடா: இந்திய அணிக்கு எதிரான தொடரில் வெஸ்ட் இண்டீசின் அதிரடி வீரர் கடைசி நேரத்தில் விலகி உள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே முதலாவது டி20 போட்டி புளோரிடாவில் நடக்கிறது.
உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்கு பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இது என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. கோலி, ரோகித் பிரச்சினை இருக்கும் இந்த நேரத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளதால் போட்டி சுவாரசியமாக அமைய வாய்ப்புள்ளது.

மீண்டும் திரும்பினர்
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி வீரர்களான பொல்லார்ட், கெயில் மற்றும் சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரேன் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். ஆனால், நட்சத்திர ஆல்ரவுண்டர் ரசல் காயம் காரணமாக இந்தியாவுடனான முதல் இரண்டு போட்டிகளில் விளையாட போவதில்லை.

மாற்றாக ஜேசன் முகமது
அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. அவருக்கு பதிலாக ஜேசன் முகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரசிகர்கள் விருந்து
குறுகிய ஓவர் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் சிறப்பாக விளையாடும் என்பதால் இந்த போட்டி இரு அணி ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும். தவிர வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பையில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

களம் காணும் வெஸ்ட் இண்டீஸ்
9 போட்டிகளில் வெறும் 5 புள்ளிகள் பெற்று லீக் சுற்றிலேயே வெளியேறியது. கார்லோஸ் ப்ரத்வேய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி போட்டியில் வெற்றிபெற்று, உலக கோப்பை தோல்வியை சரி செய்யும் முனைப்பில் களம் இறங்குகிறது.


Click it and Unblock the Notifications