திரும்ப வர்றேன்.. நாட்டுக்காக ஆடுறேன்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சிஎஸ்கே வீரர்!
Recommended Video
ஜமைக்கா : சர்வதேச போட்டிகளில் தான் மீண்டும் ஆடவுள்ளது குறித்து தன்னுடைய வீடியோ பதிவில் தெரிவித்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் டுவேனே பிராவோ, தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் தன்னுடைய அணி 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்த அவர், தான் கூடியவிரைவில் ரிடையர்மெண்ட்டிலிருந்து வெளிவர உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு அரசியலில் சிக்கி, மேற்கிந்திய அணி சின்னாபின்னமான நிலையில், தற்போது அந்த நிலைக்கு ஒரு முடிவு வந்துள்ளதாகவும், அதற்கு கடவுளுக்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் ஓய்வு
மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் பிராவோ, 14 ஆண்டுகள் தன்னுடைய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை கொடுத்தவர். அவர் கடந்த ஆண்டு அக்டோபரில் அணியிலிருந்து ஓய்வு பெற்று, தற்போது பல்வேறு அணிகளுக்காக சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்று ஆடிவருகிறார்.

ரசிகர்களின் பாராட்டு
தன்னுடைய அணிக்காக சிறப்பான ஆட்டங்களையும் ரசிகர்களுக்கு சிறப்பான தருணங்களையும் தொடர்ந்து தந்த பிராவோ, தான் வீழ்த்தும் ஒவ்வொரு விக்கெட்டின்போதும், மைதானத்திலேயே சிறப்பான டான்சையும் தந்த ரசிகர்களை மேலும் குஷியாக்கி வருபவர்.

சிறப்பான ஆட்டம்
தன்னுடைய ஓய்வை அறிவித்தாலும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக பிராவோ விளையாடி தன்னுடைய திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

ஓய்விலிருந்து வெளிவர திட்டம்
ஓய்வை அறிவித்தாலும் டி20 உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் பிராவோ, தற்போது, தன்னுடைய ஓய்விலிருந்து விலகி, மீண்டும் அணிக்காக விளையாட உள்ளதாக வீடியோ பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பாராட்டு
இதுகுறித்து சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி, ஆப்கானிஸ்தானுடன் விளையாடிய தொடரில் 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மீண்டும் விளையாட திட்டம்
தொடர்ந்து வீடியோ பதிவில் பேசியுள்ள பிராவோ, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரரான தான், விரைவில் ஓய்விலிருந்து வெளியில் வரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அணியின் வெற்றி பயணம்
கடந்த 5 ஆண்டுகளாக மேற்கிந்திய தீவுகள் அணி பல்வேறு நபர்களின் ஈகோ போன்ற காரணங்களில் சிக்கி பல வீரர்களின் வாழ்க்கை சிதைய காரணமாக இருந்ததாக குறிப்பிட்ட பிராவோ, இந்த சிக்கல்களுக்கு தற்போது முடிவு வந்துள்ளதற்கு தான் கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications