Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா வந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.. டெஸ்ட் தொடருக்கான அணி இதுதான்!

மும்பை: வரும் அக்டோபர் 4 முதல் வெஸ்ட் இண்டீஸ், இந்தியாவோடு டெஸ்ட் தொடரில் மோத உள்ளது.

அதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்து சேர்ந்தது. வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவில் ஒருமாத காலம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆட உள்ளது.

வரும் அக்டோபர் 4 முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. மொத்தம் இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரை அடுத்து, ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

ஆசிய கோப்பையில் இந்தியா பிஸி

ஆசிய கோப்பையில் இந்தியா பிஸி

இந்தியா தற்போது ஆசிய கோப்பை தொடரில் ஆடி வருகிறது. நாளையுடன் ஆசிய கோப்பை தொடர் முடிந்து விடும். அதை அடுத்து தான் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. இந்திய அணி தேர்வாளர்கள் இன்னும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யவில்லை.

அணித்தேர்வு எப்போது?

அணித்தேர்வு எப்போது?

அஸ்வின், இஷாந்த் சர்மா ஆகியோர் காயம் குணமாகி, அவர்கள் உடற்தகுதியை 29ஆம் தேதி நிரூபிக்க உள்ளனர். அதில் அவர்கள் தகுதி பெறும் பட்சத்தில் அவர்கள் அணியில் இணைவார்கள். ஒருவேளை இவர்கள் தகுதி பெறாவிட்டால் வேறு வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதால், இந்திய அணி 30ஆம் தேதி அறிவிக்கப்படவே அதிக வாய்ப்புள்ளது.

பின்தங்கிய வெஸ்ட் இண்டீஸ்

பின்தங்கிய வெஸ்ட் இண்டீஸ்

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 1948 முதல் இதுவரை 94 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளன. அதில் இந்தியா 28 வெற்றி, 30 தோல்வி, 46 டிரா முடிவுகளை பெற்றுள்ளது. இப்போது டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியோ எட்டாவது இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 போட்டிகளில் சிறந்து விளங்கினாலும், டெஸ்ட் போட்டிகளில் மிகவும் பின்தங்கி உள்ளது. எனவே, இந்த டெஸ்ட் தொடர் இந்தியாவிற்கு சாதகமாகவே இருக்கும் என கணிக்கப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷூ, கிரேக் ப்ராத்வைட், ரோஸ்டன் சேஸ், ஷேன் டோவ்ரிச், ஷானன் காப்ரியல், ஜாமர் ஹாமில்டன், ஷிம்ரன் ஹெட்மயர், ஷாய் ஹோப், அல்சாரி ஜோசப், கீமோ பால், கீரான் பாவல், கீமர் ரோச், ஜோமல் வாரிகன்

Story first published: Thursday, September 27, 2018, 18:47 [IST]
Other articles published on Sep 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+