இந்தியாவை வீழ்த்த அமெரிக்காவில் பயிற்சி எடுக்கும் வெஸ்ட் இண்டீஸ்...!
ஆர்லான்டோ: இந்தியாவில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கும் கடைசி டெஸ்ட் தொடரில் பங்கேற்க வரவுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி அமெரிக்காவில் தீவிரப் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாம்.
இந்தியாவுடன் அடுத்த மாதம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி மோதவுள்ளது.
இந்த டெஸ்ட் தொடருடன் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் வாழ்க்கைக்கு குட்பை சொல்லவுள்ளார். இந்த நிலையில் இந்தத் தொடரை வெற்றிகரமாக முடிப்பதற்காக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டவுள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

ஒரு வாரம் பயிற்சி
இந்தப் பயிற்சி முகாம் ஒரு வார காலத்திற்கு நடைபெறவுள்ளது.

அமெரிக்காவில்
அமெரிக்காவின் ஆர்லான்டோ நகரில் இந்தப் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

ஹாமில்டன் அறிவுரை
ஜமைக்காவின் விளையாட்டு மனஉளவியலாளர் டாக்டர் ஜேசன் ஸ்காட் ஹாமில்டனின் பிரத்யேக உளவியல் பயிற்சியும் இந்த முகாமில் இடம் பெறவுள்ளது.

ஒற்றுமை ஓங்குக...
இதுகுறித்து மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத் தலைவர் டேவ் கேமரூன் கூறுகையில் ஒருங்கிணைந்து ஆடுவது, வெற்றி பெறுவது என்பது குறித்து இந்த பயிற்சி முகாமில் முக்கியமாக எடுத்துரைக்கப்படவுள்ளது. நாம் எப்படி வெல்கிறோம் என்பது முக்கியமல்ல, எப்படி தோற்றோம் என்பதுதான் முக்கியம். எனவே தோல்வியைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வலியுறுத்தப்படவுள்ளது. நாங்கள் பல சமயங்களில் கடைசி நேரத் தவறுகளால் பல போட்டிகள இழந்துள்ளோம். அதை சரி செய்ய முயற்சிக்கப் போகிறோம் என்றார்.

ஒரு வருடமாக டெஸ்ட்டே இல்லை
கடந்த ஒரு வருடமாகவே மேற்கு இந்தியத் தீவுகள் அணி டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இருக்கிறது. எனவே இந்தியத் தொடர் நிச்சயம் அந்த அணிக்கு சவாலாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

3 ஒரு நாள் போட்டிகளிலும்
2 டெஸ்ட் போட்டிகள் தவிர 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் இந்தியாவுடன் மோதுகிறது மேற்கு இந்தியத் தீவுகள்.

அடுத்து நியூசிலாந்துடன்
இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் மேற்கு இந்தியத் தீவுகள் அணி நியூசிலாந்து சென்று அங்கு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகள், 2 டுவென்டி 20 போட்டிகளில் ஆடும்.


Click it and Unblock the Notifications