Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!

Recommended Video

கிறிஸ்கெய்ல் 12 சிக்சர்கள்..பாகிஸ்தான் வீரர் அப்ரிடியை முந்தினார்

பிரிட்ஜ்டவுன் : வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது.

ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 361 ரன்கள் குவித்தும் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

கிறிஸ் கெயில் அரைசதம்

கிறிஸ் கெயில் அரைசதம்

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் கிறிஸ் கெயில் அரைசதம் அடித்து அணிக்கு நல்ல துவக்கம் அளித்தார்.

ஹெட்மையர் சதம்

ஹெட்மையர் சதம்

மிடில் ஆர்டரில் ஷிம்ரான் ஹெட்மையர் 104 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது ஹெட்மையரின் நான்காவது சதம் ஆகும். மற்ற வீரர்கள் அரைசதம் அடிக்கவிட்டாலும் ஓரளவு ரன் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து பந்துவீச்சு

இங்கிலாந்து பந்துவீச்சு

இங்கிலாந்து பந்துவீச்சில் மொயீன் அலி மிக மோசமாக பந்து வீசி 7 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்தார். டாம் கர்ரன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் 10 ஓவர்கள் வீசி 62 ரன்கள் கொடுத்தனர்.

இங்கிலாந்து சொதப்பல் ஆட்டம்

இங்கிலாந்து சொதப்பல் ஆட்டம்

அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஜேசன் ராய் 2, பேர்ஸ்டோ 0 ரன்களுக்கு ஆட்டமிழந்து சொதப்பினர். அதன் பின் ஜோ ரூட் 36, இயான் மார்கன் 70, பென் ஸ்டோக்ஸ் 79, பட்லர் 34 ரன்கள் எடுத்து அணிக்கு உதவினாலும், அடுத்து வந்த லோயர் ஆர்டர் வீரர்கள் மொத்தமாக சொதப்பினர்.

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

இதையடுத்து 47.4 ஓவர்களில் 263 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்த இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த பத்து போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்து இருந்தது. அதில் இருந்து மீண்டு தற்போது வெற்றி பெற்றுள்ளது.

சிறந்த பந்துவீச்சு

சிறந்த பந்துவீச்சு

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சில் காட்ரல் 9 ஓவர்கள் வீசி 46 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தி தன் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து அசத்தினார். கேப்டன் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். சதம் அடித்த ஹெட்மையர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Story first published: Saturday, February 23, 2019, 11:03 [IST]
Other articles published on Feb 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+