For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே போட்டி.. ஏராளமான சாதனைகள்.. வாயை பிளக்க வைத்த இங்கிலாந்து - வெ.இண்டீஸ் அணிகள்!

செயின்ட் ஜார்ஜ் : வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது.

இரண்டு அணிகளும் மோதிய நான்காம் ஒருநாள் போட்டி பல சாதனைகளை உடைத்து அசர வைத்துள்ளது. இரு அணி வீரர்களும் அதிரடியில் இறங்கிய இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இங்கிலாந்து 418 ரன்கள்

இங்கிலாந்து 418 ரன்கள்

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் இயான் மார்கன் 103 ரன்களும், ஜோஸ் பட்லர் 150 ரன்களும் குவித்தனர். துவக்க வீரர்கள் இருவரும் அரைசதம் அடித்தனர். 50 ஓவர்களில் 418 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து.

அதிக சிக்ஸர்கள் சாதனை

அதிக சிக்ஸர்கள் சாதனை

77 பந்துகளில் 150 ரன்கள் அடித்த ஜோஸ் பட்லர் 12 சிக்ஸர்கள் அடித்து வாயை பிளக்க வைத்தார். இங்கிலாந்து அணி 24 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை புரிந்தது. ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்க்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற பெருமையை பெற்றது.

பழி தீர்த்த இங்கிலாந்து

பழி தீர்த்த இங்கிலாந்து

ஏழு நாட்களுக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 23 சிக்ஸர்கள் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சாதனையை அதே தொடரில் இங்கிலாந்து அணி முறியடித்து பழி தீர்த்துள்ளது.

வெ.இண்டீஸ் பரிதாபம்

வெ.இண்டீஸ் பரிதாபம்

இங்கிலாந்து நிர்ணயித்த 419 ரன்களை இலக்கை நோக்கி ஆடிய வெ.இண்டீஸ் அணி 389 ரன்களுக்கு ஆட்டமிழந்து 29 ரன்களில் தோல்வி அடைந்தது. கிறிஸ் கெயில் 162 ரன்கள் அடித்து தன் பங்குக்கு 14 சிக்ஸர்கள் அடித்தார்.

மொத்த சிக்ஸர்களில் சாதனை

மொத்த சிக்ஸர்களில் சாதனை

வெஸ்ட் இண்டீஸ் அணி 22, இங்கிலாந்து அணி 24 சிக்ஸர்கள் அடிக்க, மொத்தமாக இந்த போட்டியில் 46 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. இதுவும் உலக சாதனை ஆகும். முன்பு இந்தியா, ஆஸ்திரேலியா போட்டியில் 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு இருந்ததே அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட போட்டி ஆகும்.

பவுண்டரி மழை

பவுண்டரி மழை

இந்த போட்டியில் 807 ரன்கள் அடிக்கப்பட்டு இருந்தது. ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் இதுவே மூன்றாவது அதிகபட்ச ரன் குவிப்பு ஆகும். இது மட்டுமின்றி இந்த போட்டியில் பவுண்டரிகள் மூலம் மட்டுமே 532 ரன்கள் குவிக்கப்பட்டது. இதுவும் உலக சாதனை ஆகும்.

கிறிஸ் கெயில் சாதனை

கிறிஸ் கெயில் சாதனை

இது தவிர இந்த போட்டியில் கிறிஸ் கெயில் ஒருநாள் அரங்கில் 10,000 ரன்களையும், சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார். இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் ஒருநாள் அரங்கில் 6000 ரன்களை கடந்தார்.

Story first published: Thursday, February 28, 2019, 18:59 [IST]
Other articles published on Feb 28, 2019
English summary
West Indies vs England 4th ODI registered record number of Sixes in an ODI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X