Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேருந்து ஜன்னலை தான் தட்டினேன்.. குடுகுடுவென ஓடி வந்துவிட்டார் விராட் கோலி.. நெகிழும் ஜோஷ்வா சில்வா!

ட்ரினிடா: இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியை தனது தாய் கரோலின் சந்தித்தது எப்படி என்பது குறித்து வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோஷ்வா சில்வா விளக்கம் அளித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ்-ல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்ற நாள் முதலே இந்திய வீரர்களை சந்திக்க வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். இந்தியாவில் விராட் கோலி தனியாக நடந்து சென்று ரசிகர்களுக்கு பெரிய விஷயமாக இருக்கும். ஆனால் வெஸ்ட் இண்டீஸில் ரசிகர்கள் விராட் கோலியை எளிதாக சந்தித்து வருகின்றனர்.

West Indies Wicket Keeper Joshua Da Silva spoke about meeting Virat Kohli with his mother

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ்வா சில்வாரின் தாய் கரோலின், நேற்று விராட் கோலியை சந்தித்து ஆனந்த கண்ணீருடன் இருந்தார். இந்த சந்திப்புக்கு முன் விராட் கோலி பேட்டிங் செய்த போது வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோஷ்வா, என் அம்மா விராட் கோலியை சந்திப்பதற்காக மைதானம் வந்திருப்பதாக கூறியுள்ளார். என்னால் நம்ப முடியவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து விராட் கோலி சதம் விளாசியதை வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இதன்பின் விராட் கோலி, ஜோஷ்வா சில்வாவின் தாயை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோஷ்வா சில்வா பேசுகையில், விராட் கோலி பேருந்தில் அமர்ந்திருந்த போது, நேராக என்னிடம் எனது தாய் என்னிடம் வந்தார். வந்தபின், அங்கே பார்.. விராட் கோலி பேருந்தில் அமர்ந்திருக்கிறார் என்று கூறினார். இதன்பின் எனது தாய், விராட் கோலியை அவர் சந்திக்க விரும்புவதை புரிந்துகொண்டேன்.

உடனடியாக நேரடியாக விராட் கோலி அமர்ந்திருக்கும் ஜன்னல் அருகே சென்று, ஜன்னலை தட்டினேன். என்னையும், என் தாயையும் பார்த்த விராட் கோலி உடனடியாக பேருந்தில் இருந்து எங்களுக்காக இறங்கி வந்துவிட்டார். இந்த நாள் எனது தாய் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது. இந்த வருடத்தின் சிறந்த நாள் இதுவாக தான் என் அம்மாவுக்கு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, July 23, 2023, 13:11 [IST]
Other articles published on Jul 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+