Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்தை வீழ்த்தி 2 - வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது வெஸ்ட் இண்டீஸ் !

கொல்கத்தா: இங்கிலாந்து - மேற்கு இந்திய தீவுகள் நடுவே உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 2-வது முறையாக டி20 கோப்பையை வென்றது.

இங்கிலாந்து-மேற்கு இந்திய தீவுகள் அணி நடுவே உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா ஈடன்காடன் மைதானத்தில் தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் டேரன் சமி, பவுலிங்கை தேர்ந்தெடுத்தார்.

West Indies won the world cup t20

இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராயும், ஹெல்ஸ்சும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இங்கிலாந்துக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. பத்ரீ பந்து வீச்சில் ராய் டக் அவுட் ஆகி வெளியேற, அடுத்த ஓவரில் ஹெல்ஸ் 1 ரன்னில் நடையை கட்டினார்.

தொடக்கத்திலே இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி திணறியது. இதையடுத்து கேப்டன் மோர்கன் 5 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் இணைந்த ஜே ரூட், பட்லர் ஜோடி நிதானமாக ஆடினர்.

நிதான ஆட்டம் மூலம் 22 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்த பட்லர் பிராத்வெய்ட் பந்து வீச்சில் அவுட் ஆனார். டுவென் பிராவே பந்து வீச்சில் ஸ்டோக்ஸ் 13 ரன்னில் பெவுலியன் திரும்பினார். அடுத்து மொயீன் அலி (0), வில்லே (21), மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

ஜே ரூட் மட்டும் அதிகபட்சமாக 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. ஜோர்டன் (12), ரஷீத் (4) அவுட்டாகமல் இருந்தனர். மேற்கு இந்திய தீவுகள் அணி சார்பில் அதிகபட்சமாக பிராவோ, பிராத்வைட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு சார்லஸ் 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். கெயில் புயல் வீசுமோ என்ற அச்சத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி, அவர் 4 ரன்னில் நடையை கட்டினார். அடுத்து வந்த சிம்மன்ஸ் டக் அவுட் ஆனார். இவர்தான் அரையிறுதியில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

பிராவோ 27 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார். ரசல் (1), கேப்டன் சமி (2), என அவுட் ஆக அடுத்து வந்த வீரர்கள் குறைந்த ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசி ஓவரில் மேற்கு இந்திய தீவுகள் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைபட்டது.

ஸ்டோக்ஸ் வீசிய கடைசி ஓவரின் முதல் 4 பந்திலும் பிராத் வெயிட் 4 சிக்ஸர் விளாச மேற்கு இந்திய தீவுகள் அணி 19.4 ஓவரில் 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடி சிக்ஸர்களை விளாசிய பிராத்வெயிட், 10 பந்துகளில் 34 ரன்களும், அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற சாமுவேல்ஸ் 66 பந்துகளில் 85 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சாமுவேல்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

2 வது முறையாக கோப்பை:

இந்த வெற்றியின் மூலம் 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் 2 - வது முறையாக டி20 கோப்பையை வென்றது மேற்கு இந்திய தீவுகள் அணி.

Story first published: Monday, April 4, 2016, 1:26 [IST]
Other articles published on Apr 4, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+