Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிருப்தியில் 3 சீனியர்கள்.. 2வது ODI-க்கான ப்ளேயிங் 11ல் ரோகித் தந்த ட்விஸ்ட்.. என்னென்ன மாற்றங்கள்!

அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது போட்டிக்கான இந்திய அணியில் 3 சீனியர் வீரர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே 1 - 0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது போட்டி இன்று அகமதாபாத்தில் தொடங்கியுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

 ப்ளேயிங் 11 குழப்பம்

ப்ளேயிங் 11 குழப்பம்

இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா கடைசி நேர ட்விஸ்ட் கொடுத்துள்ளார். அதாவது ஓப்பனிங் வீரர் ஷிகர் தவான் கொரோனாவில் இருந்து குணமடைந்து வந்துவிட்டார். துணைக்கேப்டன் கே.எல்.ராகுலும் வந்துவிட்டார். எனவே தவானை ஓப்பனிங்கிற்கும் கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட்-ன் இடத்திற்கும் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இதே போல சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் வருவார் என எதிர்பார்க்கபப்ட்டது.

ரோகித் கொடுத்த ட்விஸ்ட்

ரோகித் கொடுத்த ட்விஸ்ட்

இந்நிலையில் அணியின் ப்ளேயிங் 11ல் ஒரே ஒரு முக்கிய மாற்றத்தை மட்டும் செய்துள்ளார் ரோகித் சர்மா. ஓப்பனிங்கில் இஷான் கிஷானுக்கு பதிலாக கே.எல்.ராகுல் மட்டும் மாற்றப்படுவதாக தெரிவித்தார். இதன் மூலம் ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்திய அணி ப்ளேயிங் 11

இந்திய அணி ப்ளேயிங் 11

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், பிரஷித் கிருஷ்ணா, யுவேந்திர சஹால்

Recommended Video

IND vs WI: I'm Ready To Bat Wherever Team Requires, Been Bowling in Nets As Well- S.Yadav
பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

அகமதாபாத் மைதானத்தில் 2வதாக பேட்டிங் செய்யும் அணிக்கு தான் சாதகமாக இருக்கும். கடந்த போட்டியில் கூட இந்திய அணி 2வது பேட்டிங் தான் செய்திருந்தது. இதனால் விக்கெட்டை இழக்காமல் நிதானமாக விளையாட வேண்டிய சூழலில் இந்திய அணி உள்ளது.

Story first published: Wednesday, February 9, 2022, 15:07 [IST]
Other articles published on Feb 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+