Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னதாங்க நினைச்சுக்கிட்டு இருக்கீங்க.... என்ன சொன்னாலும் நீங்க செஞ்சது தப்புதான்... வாகன் குற்றச்சாட்டு!

மும்பை : நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையிலான ஐபிஎல் 2021 தொடரின் 4வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அதிரடி வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் வெற்றிக்காக கடுமையாக போராடியும் வெற்றி வசப்படவில்லை.

இந்நிலையில் அந்த அணியில் துவக்க வீரராக ஜோஸ் பட்லரை உபயோகப்படுத்தாதது குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அதிரடி வெற்றி

பஞ்சாப் கிங்ஸ் அதிரடி வெற்றி

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 4வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரணிக்கு 222 ரன்கள் இலக்கை கொடுத்தது. இதையடுத்து களமிறங்கி ஆடிய சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடுமையாக போராடியும் வெற்றி பெற முடியவில்லை.

சஞ்சு சாம்சன் அதிரடி

சஞ்சு சாம்சன் அதிரடி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி சதத்தை கடந்தார். தொடர்ந்து இறுதிவரை தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தி வெற்றிக்காக போராடினார். துவக்க வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மனன் வோரா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

மைக்கேல் வாகன் கேள்வி

மைக்கேல் வாகன் கேள்வி

இதையடுத்து 4வது வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் 25 ரன்களை அதிரடியாக அடித்து அவுட்டானார். இந்நிலையில் அதிகமான அனுபவம் வாய்ந்த ஜோஸ் பட்லரை துவக்க வீரராக களமிறக்காதது குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் டி20 போட்டிகளில் பட்லர்தான் துவக்க வீரராக களமிறங்குவார் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ராஜஸ்தான் அணியிடம் கேள்வி

தனது ட்விட்டர் பக்கத்தின்மூலம் பேசியுள்ள வாகன், பட்லரின் கீப்பிங் அனுபவம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறப்பாக உதவியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரை துவக்க வீரராக களமிறக்காதது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளனார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த விவகாரத்தில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்று அவர் கேட்டுள்ளார்.

அதிரடி கிளப்பிய பட்லர்

அதிரடி கிளப்பிய பட்லர்

4வது வீரராக நேற்றைய தினம் விளையாடிய ஜோஸ் பட்லர், அறிமுக வீரர் ரைல் மெரிடித்தின் பந்துவீச்சில் தொடர்ந்து 4 பவுண்டரிகளை அடித்து அதகளம் செய்தார். 13 பந்துகளில் அதிரடியாக 25 ரன்களை குவித்த அவர் ஜய ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் அவுட்டாகும் வரையிலும் தனனுடைய அதிரடியை தொடர்ந்தார்.

Story first published: Tuesday, April 13, 2021, 19:38 [IST]
Other articles published on Apr 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+