Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அக்கா சாரா டெண்டுல்கர் இருக்க.. தம்பி அர்ஜுனுக்கு நிச்சயதார்த்தம்! சச்சின் முடிவுக்கு இதுதான் காரணமா

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது மூத்த மகள் சாரா டெண்டுல்கருக்கு முன்பாக மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிச்சயதார்த்தம் செய்து முடித்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. அக்காவை விட்டுவிட்டு தம்பிக்கு முதலில் திருமணம் செய்வதற்கு பின், வேறு சில காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் சானியா சத்தோர் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காகவும், ரஞ்சி டிராபி தொடரில் கோவா அணிக்காகவும் விளையாடி வருகிறார். அவ்வப்போது அர்ஜுன் டெண்டுல்கர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

Engagement for Son Arjun Before Daughter Sara Tendulkar

ஆனால் அர்ஜுன் டெண்டுல்கரின் பவுலிங்கில் வேகம் குறைவாக இருப்பதால், அவரின் பவுலிங் பெரியளவில் எடுபடுவதில்லை. இதனால் மும்பை அணியில் மாற்று வீரராகவே அர்ஜுன் டெண்டுல்கர் சேர்க்கப்படுகிறார். 25 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் பெரியளவில் சாதிக்கவில்லை என்றாலும், வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

அதாவது அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா சத்தோர் இருவருக்கும் திருமண நிச்சயம் முடிவடைந்திருக்கிறது. இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பலரும் சாரா டெண்டுல்கரை விட்டுவிட்டு சச்சின் டெண்டுல்கர் ஏன், மகன் அர்ஜுனுக்கு முதலில் திருமணம் செய்கிறார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதற்கு சாராவின் விருப்பத்தில் சச்சின் டெண்டுல்கர் தலையிட விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. தற்போது சாரா டெண்டுல்கர் என்ஜிஓ பணிகள் மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே ஆஸ்திரேலியா சுற்றுலாத்துறையின் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இளைஞர்கள் மத்தியில் சாரா பிரபலமாக மாறி இருக்கும் நிலையில், தற்போது திருமணம் வேண்டாம் என்று முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. அதேபோல் சுப்மன் கில் உடன் சாரா டெண்டுல்கர் காதல் உறவில் இருந்து வருகிறார். இதனை இதுவரை இருவருமே பொதுவெளியில் ஒப்புக் கொள்ளவில்லை. இவர்கள் இருவருக்கும் பிரேக் அப் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் லண்டனில் நடந்த தொண்டு நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கருடன் சாரா டெண்டுல்கரும் வந்திருந்தார். அந்த இடத்தில் சுப்மன் கில் இருந்த போது, சக வீரர்கள் அவரை கிண்டல் செய்ய தொடங்கினர். இதனால் சாரா மற்றும் சுப்மன் கில் இடையில் காதல் தொடர்ந்து வருவதாக பேச்சுகள் எழுந்தன. சுப்மன் கில்லுக்கு 25 வயதாகும் நிலையில், இன்னும் சில ஆண்டுகளுக்கு திருமணம் வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளார்.

தற்போது கேப்டனாகி இருக்கும் சூழலில், இன்னும் சில ஆண்டுகளுக்கு பின் திருமணம் செய்ய சுப்மன் கில் முடிவு எடுத்துள்ளார். இதன் காரணமாகவே சாரா டெண்டுல்கருக்கு முன்பாக அர்ஜுன் டெண்டுல்கருக்கு திருமணம் செய்து வைக்க சச்சின் குடும்பத்தினர் முடிவு எடுத்து, நிச்சயதார்த்தத்தை முடித்திருக்கின்றனர். இதனால் விரைவில் சுப்மன் கில் - சாரா இடையிலான காதல் வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, August 14, 2025, 10:36 [IST]
Other articles published on Aug 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+