Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கட்டிப்பிடித்த ரசிகர்.. ரோஹித் உட்பட 5 வீரர்களை தனி அறையில் அடைத்த ஆஸி.. ஷாக் சம்பவம் - பின்னணி

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு சென்று இருக்கும் ரோஹித் சர்மா உட்பட 5 இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் திடீரென தனிமைப்படுத்தியது ஏன் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. இவர்கள் உணவு சாப்பிட்ட ஹோட்டலில் என்ன நடந்தது என்ற விவரமும் வெளியாகி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்னும் சில நாட்களில் நடக்க உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிக்காக தற்போது வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் ஒன்றில் உணவு உட்கொண்ட ரோஹித் சர்மா உட்பட 5 முக்கிய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமை

தனிமை

அதன்படி ரோஹித் சர்மா, சுப்மான் கில், பண்ட், ப்ரித்வி ஷா , சைனி ஆகியோர் உணவு உட்கொள்ள சென்றுள்ளார். சிட்னியில் இருக்கும் பிரபல உணவகம் ஆகும் இது. இங்கு இந்தியர்கள் அதிகமாக வந்து உணவு உட்கொள்வது வழக்கம்.

எப்படி

எப்படி

இங்குதான் ரோஹித் உட்பட 5 வீரர்களும் சென்றுள்ளனர். இந்த நிலையில் இவர்கள் ஹோட்டலில் உணவு உட்கொள்ளும் போது அங்கு வந்த இந்திய ரசிகர் நவல்தீப் சிங் என்ற இந்திய இளைஞர், இவர்கள் உணவு உட்கொள்வதை புகைப்படம் எடுத்து வெளியிட்டார். அதோடு இவர்கள் உணவு உட்கொள்வதை வீடியோ எடுத்தும் வெளியிட்டார்.

வீடியோ

வீடியோ

இவர்களின் உணவிற்கு நவல்தீப் சிங்தான் பில் கட்டி இருக்கிறார். அதோடு இல்லாமல் இதை குறித்து டிவிட் செய்த நவல்தீப் சிங், நான் அவர்களை சந்தித்தேன், பண்ட் என்னை கட்டிப்பிடித்தார் என்று குறிப்பிட்டு இருந்தார். இவர் செய்த இந்த டிவிட்தான் இப்போது வைரலாகி உள்ளது. விதிப்படி இந்திய வீரர்கள் ஹோட்டலை விட்டு வெளியே சென்று சாப்பிட கூடாது.

சாப்பிட கூடாது

சாப்பிட கூடாது

இன்னொரு பக்கம் ரசிகர்களை தொட கூடாது. கொரோனா காலம் என்பதால் வீரர்கள் பயோ பபுளில் வைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் ரோஹித் சர்மா உட்பட 5 வீரர்களும் இந்த விதியை மீறி உள்ளனர். இதன் காரணமாக தற்போது இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சிக்கல்

சிக்கல்

5 வீரர்களையும் தற்போது ஆஸ்திரேலிய நிர்வாகம் தனியறையில் இருக்கும்படி கூறியுள்ளது. தனியாக பயிற்சி மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த 5 வீரர்களை நான் கட்டிபிடிக்கவில்லை. பில் மட்டுமே கட்டினேன் நவல்தீப் சிங் குறிப்பிட்டுள்ளார். இந்த 5 இந்திய வீரர்களும் அடுத்த போட்டியில் இந்திய அணிக்காக ஆட அனுமதிக்கப்படுவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Sunday, January 3, 2021, 9:46 [IST]
Other articles published on Jan 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+