Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாட் ‘சன்’... டுவிட்டரில் ஷாரூக் கலகல... !

மும்பை : ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் கொல்கத்தா அணி தோற்றது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நகைச்சுவையாக பதிவு வெளியிட்டுள்ளார் நடிகர் ஷாரூக்கான்.

மும்பையில் நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல். ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியுடன் கொல்கத்தா அணி மோதி தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இந்நிலையில் கொல்கத்தா அணியின் தோல்வி குறித்து அந்த அணியின் உரிமையாளரான நடிகர் ஷாரூக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர், " ராஜஸ்தான் அணி பிரமாதமாக விளையாடினார்கள். வெற்றிக்கு உரியவர்கள்தான். எனது கொல்கத்தா அணி வீரர்களே, ஒவ்வொருவரும் சிறப்பாக விளையாடினீர்கள். ஆனால் சில நேரங்களில் நமது சிறப்பான ஆட்டம் கூட போதுமானதாக இருப்பதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

அதோடு, இது தொடர்பாக தனது மகன் அப்ராமுடன் பேசுவது போன்ற புகைப்படத்தையும், நகைச்சுவையாக ஒரு உரையாடலையும் அவர் பதிவு செய்துள்ளார். அதில், அவரது மகன் "அப்பா நாம ஜெயிச்சுட்டோமா? என்று கேட்கிறார். ஷாரூக் "இல்லை சன்" என்கிறார். "ஏன் அப்பா?" என சொல்கிறார். ஏன் என்று ஷாருக்கின் மகன் மீண்டும் கேட்க, ஷாரூக் "வாட் சன்" என பதிலளிக்கிறார்.

ராஜஸ்தான் வீரர் ஷேன் வாட்சன் அடித்த சதம் தான், அந்த அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது. அதையே இவ்வாறு ஷாரூக் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

ஷாரூக்கின் இந்த பதிவுக்கு அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலர் ஷாரூக்கின் நகைச்சுவை கலந்த விளையாட்டு உணர்வை பாராட்டியுள்ளனர்.

Story first published: Monday, May 18, 2015, 13:24 [IST]
Other articles published on May 18, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+