Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரித்விகிட்ட இருந்து எப்படி ஆடறதுன்னு கத்துக்கங்க... இல்லன்னா எல்லாரையும் தூக்க வேண்டியதுதான்

அகமதாபாத் : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை டெல்லி கேபிடல்ஸ் வெற்றி கொண்டுள்ளது.

Recommended Video

Prithvi Shaw scores the fastest fifty of IPL 2021 | Oneindia Tamil

இந்த போட்டியில் கேகேஆர் அணியின் துவக்க பேட்டிங் ஆர்டர் சொதப்பியதை ஆடுத்து அந்த அணி சொற்ப ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

இதனிடையே கேகேஆரின் இந்த பேட்டிங் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அந்த அணியின் கோச் மெக்கல்லம் குறிப்பிட்டுள்ளார்..

25வது போட்டி

25வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் 25வது போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களில் சுருண்டது. அந்த அணியின் வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை அளிக்க தவறினர்.

டெல்லி வீரர்கள் சிறப்பு

டெல்லி வீரர்கள் சிறப்பு

இதையடுத்து விளையாடிய டெல்லி அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர். பிரித்வி ஷா 41 பந்துகளில் 82 ரன்களையும் ஷிகர் தவான் 47 பந்துகளில் 46 ரன்களையும் குவித்தனர். இதையடுத்து 7 விக்கெட்டுகள் வத்தியாசத்தில் டெல்லி அணி சிறப்பான வெற்றியை பெற்றது.

வெற்றிக்கான தீவிரம் வேண்டும்

வெற்றிக்கான தீவிரம் வேண்டும்

ஆனால் கேகேஆர் அணி பேட்ஸ்மேன்களின் பேட்டிங் அந்த அணியின் கோச் பிரன்டன் மெக்கல்லமிற்கு ஏமாற்றத்தை எற்படுத்தியுள்ளது. வீரர்களின் தன்னம்பிக்கை உள்ளிட்டவற்றை கொண்டு அவர்களை தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் அணியின் வெற்றிக்காக தீவிரமாக விளையாட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கோச் வெளிப்படை

கோச் வெளிப்படை

இந்த தீவிரத்தைதான் தானும் கேப்டன் இயான் மார்கனும் வீரர்களிடம் எதிர்பார்ப்பதாகவும் ஆனால் டெல்லி கேபிடல்ஸ் வீரர் பிரித்வி ஷாவிடம் காணப்படும் இந்த தீவிரம் தங்களது அணி வீரர்களிடம் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அனால் தொடர்ந்து இதே நிலை காணப்பட்டால், அணி நிர்வாகத்திடம் பேசி அணியை மாற்றும் முடிவை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முயற்சிக்கும் தீவிரம்

முயற்சிக்கும் தீவிரம்

அணியில் புதிய வீரர்களை எடுத்து அதன்மூலம் அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முயற்சிப்போம் என்றும் அவர் மேலும் தெவித்துள்ளார். ஒவ்வொரு பந்திலும் சிக்ஸ் அல்லது பவுண்டரியை அடிப்பது கடினம்தான். ஆனால் அதை முயற்சிக்கும் தீவிரம் வீரர்களிடம் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, April 30, 2021, 11:30 [IST]
Other articles published on Apr 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+