Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க கேட்ட இடம் கிடைக்காது.. துணை கேப்டன் ரோஹித்தை புது இடத்தில் களமிறக்கும் பிசிசிஐ.. செம பின்னணி

சிட்னி: இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக பதவி ஏற்று இருக்கும் ரோஹித் சர்மா, அடுத்த டெஸ்ட் போட்டியில் ஓப்பனிங் இறங்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் எண்ணத்தில் பிசிசிஐ உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நம்பிக்கையில் தற்போது உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட அவமானம் காரணமாக தோல்விக்கு சிறப்பான பதிலடியை இந்திய அணி கொடுத்துள்ளது.

எப்படி

எப்படி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் களமிறங்க போகும் உத்தேச அணியின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி மூன்றாவது டெஸ்டில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், ரஹானே, புஜாரா, பண்ட், கே. எல் ராகுல், ஜடேஜா, அஸ்வின், பும்ரா, சிராஜ், நடராஜன் (அல்லது ஷரத்துல்) ஆகியோர் ஆட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

மோசம்

மோசம்

இந்த நிலையில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் நிறைய மாற்றம் நடக்க உள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் ஓப்பனிங் வீரராக ரோஹித் களமிங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் ரோஹித் சர்மாவை ஓப்பனிங் வீரராக இறக்கும் எண்ணம் இந்திய அணிக்கு இல்லை என்கிறார்கள்.

ஓப்பனிங் வீரர்

ஓப்பனிங் வீரர்

அதன்படி இந்திய அணியின் ஓப்பனிங் வீரராக கே. எல் ராகுல் இறங்குவார் என்று கூறுகிறார்கள். அவருடன் சுப்மான் கில் இன்னொரு ஒப்பனராக இறங்குவார். ரோஹித் சர்மா இந்திய அணியில் 4வது வீரராக இறங்குவார். டெஸ்ட் ஓப்பனிங்கில் அதிக அனுபவம் இருப்பதால், கே. எல் ராகுல் ஓப்பனிங் இறங்குவார் என்கிறார்கள். மூன்றாவது வீரராக புஜாரா இறங்க உள்ளார்.

ரஹானே

ரஹானே

நான்காவது இடத்தில் இறங்கி வந்த ரஹானே 5வது இடத்திலும் பண்ட் 6வது இடத்திலும் களமிறங்க உள்ளனர். அதற்கு பின் ஜடேஜா, அஸ்வின், பும்ரா, சிராஜ், நடராஜன் ஆகியோர் களமிறங்க உள்ளனர். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

Story first published: Monday, January 4, 2021, 14:34 [IST]
Other articles published on Jan 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+