Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா vs ஆஸ்திரேலியா.. எந்த சேனல், எந்த ஓடிடியில் பார்க்கலாம்? ஆட்டம் எத்தனை மணிக்கு தொடக்கம்?

மொஹாலி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை எந்த சேனல், எந்த ஓடிடி பார்க்க முடியும் என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 2 வாரங்களில் தொடங்கவுள்ளது. அதற்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய அணியை சொந்த மண்ணில் இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது.

When and Where to Watch the India vs Australia ODI series and Match starting time

மொஹாலியில் தொடங்கவுள்ள முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிபெறுவதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. இதனால் கேஎல் ராகுல் தலைமையில் இந்திய வீரர்கள் களமிறங்க உள்ளனர்.

உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணியின் பேக் அப் மற்றும் மிடில் ஆர்டர் வீரர்களை தயார் செய்யும் வகையில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி உள்ளிட்டோர் வாய்ப்பை பெறவுள்ளனர். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் மீது ரசிகர்களின் கவனம் குவிந்துள்ளது.

அதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வின் 21 மாதங்களுக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளதால், அவரின் பவுலிங் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் நாளை மதியம் 2 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியை ஆங்கில வர்ணனையில் பார்க்க வேண்டும் என்றால் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

அதேபோல் இந்தி வர்ணனையில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் கலர்ஸ் சினிபிளக்ஸ் சூப்பர்ஹிட்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம். அதேபோல் தமிழ் வர்ணனையில் கலர்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம். அதேபோ ஓடிடியை பொறுத்தவரை ஜியோ சினிமா செயலியில் இலவசமாக பார்க்க முடியும். அதேபோ மொஹாலியில் போட்டியின் இடையே மழை பெய்ய வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.

Story first published: Thursday, September 21, 2023, 21:16 [IST]
Other articles published on Sep 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+