Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WI vs IND: வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா டெஸ்ட் போட்டி.. தொடங்கும் நேரம் என்ன? எந்த சேனலில் பார்ப்பது?

டோமினிக்கா: வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கும் நேரம், ஒளிபரப்பும் சேனல் உள்ளிட்ட விவரங்களை பற்றி பார்க்கலாம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு பின், இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தின் முதல் தொடர் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

When and Where to Watch the West Indies vs India Test Series starting Today

அதுமட்டுமல்லாமல் 21 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்ததில்லை. இதனால் 21 ஆண்டுகால வரலாற்று பெருமையை இந்திய அணி தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் உள்ளிட்ட சில இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இளம் வீரர்களின் ஆட்டம் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

இதனிடையே வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் எந்த சேனலில் ஒளிபரப்பாகிறது என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர். ஏனென்றால் இந்த தொடரை ஒளிபரப்பு செய்வதற்கு எந்த தொலைக்காட்சியும் முன் வரவில்லை. வழக்கமாக நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது சந்திக்கும் பிரச்சனை தான் இது. ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸில் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கே இரவு 7 மணி ஆகிவிடும்.

இந்தியாவில் அதிகளவிலான ரசிகர்கள் இரவு நேரத்தில் டெஸ்ட் போட்டியை பார்க்க மாட்டார்கள் என்பதால், தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பு செய்ய முன்வருவதில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டி டிடி தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. அதேபோல் ஜியோ சினிமா செயலியிலும் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதற்கு ரசிகர்கள் பணம் கட்ட தேவையில்லை.

அதேபோல் டெஸ்ட் போட்டியின் முதல் செஷன் ஆட்டம் 7.30 மணிக்கு தொடங்கப்பட்டு 9.30 வரை நடத்தப்படும். அதேபோல் 40 நிமிட உணவு இடைவேளைக்கு பின் 10.10 மணிக்கு 2வது செஷன் தொடங்கப்பட்டு 12.10 மணிக்கு முடிக்கப்படும் என்றும், கடைசி செஷன் 12.30 மணிக்கு தொடங்கப்பட்டு 2.30 மணிக்கு ஆட்டம் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 12, 2023, 8:12 [IST]
Other articles published on Jul 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+