Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்க அப்பாவைப் பத்தி தப்பாவா பேசுறே.. தோஸ்த்துக்கு கும்மாங் குத்து விட்ட சச்சின் மகன்!

பெங்களூர்: சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் பொல்லாக் கோவக்காரர் போல. தன்னுடைய தந்தையைப் பற்றிய பேசிய தனது நண்பரை அவர் சரமாரியாக குத்து விட்டு காயப்படுத்தி விட்டாராம்.

2007ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியின்போது முதல் சுற்றிலேயே இந்தியா வெளியேறி விட்டது.

இதனால் இந்திய ரசிகர்கள் கடும் கோபத்துடன் இருந்தனர். அவர்களில் அர்ஜூனின் நண்பர் ஒருவரும் அடக்கம். சச்சின் டக் அவுட் ஆனதால்தான் இந்தியா தோற்றதாக அவர் அர்ஜூனிடம் கூறியதால் அவர் கடுப்பாகி அடித்து விட்டாராம்.

இலங்கைக்கு எதிரான போட்டியில்

இலங்கைக்கு எதிரான போட்டியில்

2007ல் மேற்கு இந்தியத் தீவுகளில் உலகக் கோப்பைப் போட்டி நடந்தது. அப்போது இந்தியா பி பிரிவில் முக்கியமான போட்டியில் இலங்கையிடம் தோல்வியுற்றது. இதனால் தொடரிலிருந்து விலகியது.

டெண்டுல்கருக்கு முட்டை

டெண்டுல்கருக்கு முட்டை

இந்தப் போட்டியில் சச்சின் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இந்தியா இப்போட்டியில் 69 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போனது.

அர்ஜூன் அப்செட்

அர்ஜூன் அப்செட்

அப்பா டக் அவுட் ஆனதால் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் அப்செட்டாக இருந்தார். அவர் ரொம்பக் கோவக்காரர் என்பதால் அவரது அம்மா அஞ்சலி, செல்லம், யாராவது உன்னை அப்பா டக் அவுட் ஆனது பற்றிப் பேசினால், கேட்டால் கோபப்படக் கூடாது. டென்ஷன் ஆகக் கூடாது என்று சொல்லி கட்டுப்படுத்தி வைத்திருந்தாராம்.

அதையும் மீறி பொங்கிய அர்ஜூன்

அதையும் மீறி பொங்கிய அர்ஜூன்

ஆனால் தனது நண்பர் ஒருவர், தன்னிடம் தனது தந்தை டக் அவுட் ஆனது குறித்து கிண்டலடித்துப் பேசியதால் கோபமாகி அவரை சரமாரியாக குத்தி விட்டாராம் அர்ஜூன். அப்போது அர்ஜூனுக்கு 7 வயது.

மறுபடியும் சொன்ன...

மறுபடியும் சொன்ன...

அடித்ததோடு நில்லாமல், மறுபடியும் என் அப்பாவைப் பற்றித் தப்பாக பேசினால் சும்மா விட மாட்டேன் என்றும் கோபமாக கூறினாராம் அர்ஜூன்.

புத்தகத்தில்

புத்தகத்தில்

சச்சின் டெண்டுல்கர் எழுதியுள்ள சுயசரிதைப் புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, November 7, 2014, 18:18 [IST]
Other articles published on Nov 7, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+