Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாம போக வேண்டாம்.. கங்குலி, சச்சினிடம் அப்படியா சொன்னாரு டிராவிட்!

டெல்லி: 2007 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நீங்க விளையாட வேண்டாம்னு சச்சின் டெண்டுல்கர் மற்றும் கங்குலிக்கு ஆலோசனை கூறியவர் டிராவிட்தான். முற்றிலும் இளம் வீரர்களுடன் தோனி தலைமையில் ஆடிய இந்திய அணி உலகக் கோப்பையை வென்று புதிய சாதனையை அந்தத் தொடரில் படைத்தது.

Recommended Video

Gambhir praises Dravid by comparing Sachin and Ganguly

இந்தத் தகவலை முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புத் தெரிவித்துள்ளார். இளையவர்கள் போய் விளையாடட்டும். நீங்க போகாதீங்க என்று சச்சின், கங்குலிக்கு டிராவிட்தான் ஆலோசனை கூறினார் என்றும், அதை அவர்களும் ஏற்றுக் கொண்டனர் என்றும் ராஜ்புத் தெரிவித்துள்ளார்.

தோனி தலைமையிலான இந்திய அணி இந்த வெற்றியைப் பெற்ற பிறகுதான் சர்வதேச அரங்கில் 20-20 போட்டிகளுக்குப் புது அடையாளம் கிடைத்தது என்பது நினைவிருக்கலாம்.

மும்மூர்த்திகள் இல்லை

மும்மூர்த்திகள் இல்லை

அதை விட முக்கியமாக இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கியக் காரணமே மூத்த வீரர்கள் யாரும் இதில் இடம் பெறாமல் முற்றிலும் புதிய திறமைகள் இடம் பெற்றது என்றுதான் பலரும் கருதினர். குறிப்பாக சச்சின், டிராவிட், கங்குலி இத்தொடரில் பங்கேற்கவில்லை. இந்தத் தொடருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டிகள் நடந்தன. அதில் இந்த மும்மூர்த்திகள் சரிவர ஆடவில்லை.

ஏமாற்றத்தில் டிராவிட் அணி

ஏமாற்றத்தில் டிராவிட் அணி

ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடரில் முதல் சுற்றோடு இந்தியா வெளியேற்றப்பட்டது. இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இதனால் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தோனி கேப்டனாக்கப்பட்டார். இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டனர். மூத்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். தோனி தலைமையிலான அணி அட்டகாசமாக ஆடி கோப்பையை தட்டி வந்தது. தோனி புதிய சூப்பர் ஹீரோவாக உருவெடுத்தார்.

டிராவிடின் பெருந்தன்மை

டிராவிடின் பெருந்தன்மை

இருப்பினும் மூத்த வீரர்கள் வெளியேற்றப்படவில்லை என்றும் அப்போது கேப்டனாக இருந்த டிராவிடின் ஆலோசனையின்படியே மூத்த வீரர்கள் தாங்களாக ஒதுங்கிக் கொண்டனர் என்றும் ராஜ்புத் தெரிவித்துள்ளார். நாம போக வேண்டாம். பசங்க போய்ட்டு வரட்டும் என்று டிராவிட் கூறிய ஆலோசனையை சச்சினும், கங்குலியும் உடனடியாக ஏற்றுக் கொண்டனர் என்றும் ராஜ்புத் தெரிவித்துள்ளார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று டிராவிட் கூறிய யோசனை அது என்றார் ராஜ்புத்.

சச்சின் ஏக்கம் நிறைவேறியது

சச்சின் ஏக்கம் நிறைவேறியது

அந்தத் தொடரோடு தோனியின் வேட்டை நிற்கவில்லை. 2011ல் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்று சச்சினுக்கு அவர் சமர்ப்பித்தார். அது இந்தியாவுக்குக் கிடைத்த 2வது உலகக் கோப்பையாகும். முதல் கோப்பையை 1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றிருந்தது. இந்த வெற்றியின் மூலம் நீண்ட காலமாக ஆடியும் உலககக் கோப்பையை வெல்லமுடியலையே என்ற ஏக்கத்தில் இருந்த சச்சினின் கவலையும் நீங்கியது.

Story first published: Tuesday, June 30, 2020, 12:24 [IST]
Other articles published on Jun 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+