Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மைதானத்தில் அடித்துக்கொண்ட கோஹ்லியும், கம்பீரும் இப்போது ஒரே அணியில்! ரசிகர்கள் மனதில் திக்.. திக்

கொல்கத்தா: அடித்துக்கொள்ளும் அளவுக்கு, ஐபிஎல் தொடரில் மைதானத்தில் மோதிக்கொண்ட விராட் கோஹ்லியும், கவுதம் கம்பீரும் இப்போது டெஸ்ட் அணிக்காக இணைந்து ஆட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது ரசிகர்களிடையே பரபரப்பு விவாதமாக மாறிப்போயுள்ளது.

2 வருடங்களுக்கு பிறகு கம்பீருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற உள்ள நிலையில், அதிலேயே கம்பீர் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால், டெஸ்ட் கேப்டனாக உள்ள விராட் கோஹ்லிக்கும், கம்பீருக்கும் நடுவே ஐபிஎல் தொடர்கள் சிலவற்றில் பயங்கர மோதல்கள் ஏற்பட்டுள்ளது ரசிகர்களின் நினைவுக்கு வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை.

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

2013ம் ஆண்டு கொல்கத்தா நைட்டைரஸ்ட் அணிக்காக கம்பீரும், பெங்களூர் அணிக்காக விராட் கோஹ்லியும் ஆடிக்கொண்டிருந்தனர். பெங்களூரில் நடந்த இவ்விரு அணிகள் நடுவேயான ஒரு போட்டியில்தான் அந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது.

பாலாஜி ஓவரில் அவுட்

பாலாஜி ஓவரில் அவுட்

பாலாஜி 10வது ஓவரை வீசியபோது, கோஹ்லி கேட்ச் கொடுத்து அவுட்டானார். முந்தைய ஓவரில்தான் கோஹ்லி பிரதீப் சங்வான் பவுலிங்கில் 2 சிக்சர்கள் விளாசியிருந்தார் என்பதால் கொல்கத்தா அணியினரின் உற்சாக கொண்டாட்டம் பெரிதாக இருந்தது. கடுப்பான கோஹ்லி, பெவிலியனுக்கு பதிலாக, கொல்கத்தா வீரர்கள் கொண்டாட்டம் நடத்திய பகுதிக்கு சென்று ஏதோ கூறினார்.

இருவரும் மோதல்

இருவரும் மோதல்

இதைப்பார்த்த, கம்பீர், கோஹ்லியை நோக்கி திட்டியபடியே நடந்து வந்தார். அப்போது கோஹ்லியும், கம்பீரும் நேருக்கு நேர் கை கலப்பில் ஈடுபடும் சூழல் உருவானது. நல்லவேளையாக ரஜத் பாட்டியா நடுவே வந்து இரு வீரர்களையும் விலக்கி விட்டார்.

கோபக்கார நண்பர்கள்

கோபக்கார நண்பர்கள்

2015ம் ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் இதேபோன்ற மோதல் சம்பவம் நடந்தது. இத்தனைக்கும் கோஹ்லி-கம்பீர் ஜோடி, டெல்லி அணி, வடக்கு மண்டல அணி மற்றும் இந்திய அணியில் இணைந்து விளையாடிய அனுபவம் உள்ளவர்கள்தான். இருவருமே கோபக்காரர்கள் என்பதால் டெஸ்ட் போட்டியில் இருவரும் இணைந்து செயல்படுவார்களா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Story first published: Wednesday, September 28, 2016, 13:39 [IST]
Other articles published on Sep 28, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+