Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லி செய்த ஒரு காரியத்தால் கண்ணீர் விட்ட சச்சின்

மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கோஹ்லி செய்த ஒரு காரியத்தால் கண்ணீர்விட்டுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோஹ்லியை பலரும் ஒப்பிட்டு வருகிறார்கள். முதலில் கோஹ்லி 15 ஆண்டுகள் விளையாடட்டும் அதன் பிறகு அவரை சச்சினுடன் ஒப்பிடுவது பற்றி பார்க்கலாம் என முன்னாள் இலங்கை பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கோஹ்லியால் சச்சின் அழுத சம்பவம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

சச்சின்

சச்சின்

இது கடந்த 2013ம் ஆண்டு நடந்தது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியை முடித்துவிட்டு சச்சின் உடைமாற்றும் அறையில் அமர்ந்திருந்தார். அங்கு வந்த கோஹ்லி ஒரு கயிறை அவரிடம் கொடுத்து இது காலமான என் தந்தை எனக்கு அளித்தது என கூறியுள்ளார்.

கோஹ்லி

கோஹ்லி

இந்த கயிறை கையில் கட்டிக் கொண்டால் அதிர்ஷ்டம் என்று நம்பிக்கை. இதை யாராவது ஸ்பெஷலானவருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது இந்த கயிறை உங்களுக்கு பரிசளிக்கிறேன் என்று கூறி அதை அவரிடம் அளித்துவிட்டு அவரின் காலை தொட்டு கும்பிட்டுள்ளார் கோஹ்லி.

அழுகை

அழுகை

கோஹ்லியின் செயலால் நெகிழ்ச்சி அடைந்த சச்சின் அழுதுவிட்டாராம். கண்ணீரை துடைத்துக் கொண்டு அவர் கோஹ்லியிடம் கூறியதாவது, நீ என் தம்பி போன்றவர். நீ என் காலை தொடக் கூடாது என்றார்.

கயிறு

கயிறு

கோஹ்லி தனக்கு பரிசளித்த அந்த கயிறை சில நாட்கள் கழித்து அதை அவரிடமே திருப்பிக் கொடுத்துள்ளார் சச்சின். இது மறைந்த உங்கள் தந்தை உங்களுக்கு அளித்தது, அதனால் இந்த கயிறு உங்களிடம் இருப்பது தான் சரி என சச்சின் கோஹ்லியிடம் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, June 10, 2016, 12:30 [IST]
Other articles published on Jun 10, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+