
டெல்லி அணி வெற்றி
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் கேகேஆர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபியை பின்னுக்கு தள்ளிவிட்டு 2வது இடத்திற்கு டெல்லி கேபிடல்ஸ் முன்னேறியுள்ளது.

154 ரன்கள்
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங்கை செய்த கேகேஆர் அணி 154 ரன்களில் போட்டியை முடித்துக் கொண்டது. அந்த அணியின் டாப் ஆர்டரில் பிரச்சினை உள்ள நிலையில் ரஸ்ஸல், கில் மற்றும் திரிப்பாட்டி ஆகியோர் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

கேகேஆர் திணறல்
ஆயினும் லலித் யாதவ், அக்சர் படேல் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய டெல்லி பௌலர்களின் பந்துவீச்சுக்கு முன்பு அவர்களால் சிறப்பான பேட்டிங்கை அளிக்க முடியவில்லை. இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை அளித்தனர்.

கேப்டன்ஷிப் மகிழ்ச்சி
குறிப்பாக பிரித்வி ஷா 41 பந்துகளில் 82 ரன்களை குவித்தார். இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி எளிதான வெற்றியை பெற்றுள்ளது. இதனிடையே, வெற்றியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரிஷப் பந்த், வெற்றிகள் கிடைத்தால் கேப்டன்ஷிப் மிகவும் மகிழ்ச்சியானதாக மாறிவிடுவதாக தெரிவித்துள்ளார்.

ரிஷப் அறிவுறுத்தல்
கடந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் இந்த போட்டியில் அணியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடி பெஸ்டை கொடுக்க வேண்டும் என்று இளம் வீரர்களக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்


Click it and Unblock the Notifications











