ஒரு "கடவுள்" இன்னொரு கடவுளைச் சந்தித்தபோது...!
ரியோ டி ஜெனீரோ: சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கடவுள். அந்தக் கடவுள் இன்னொரு கடவுளைச் சந்தித்தால் எப்படி இருக்கும்.. இதோ அந்த சுவாரஸ்ய செய்தி.
சச்சின் டெண்டுல்கர் ரியோ டி ஜெனீரோ சென்றுள்ளார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் சார்பில் பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ள அவர் அங்கு விஜயம் செய்துள்ளார். இந்த நிலையில் இந்திய வீரர்களையும் அவர் சந்தித்து உற்சாகம் கொடுத்துப் பேசினார்.

அடுத்து அவர் ரியோவின் முக்கியமான இடம் ஒன்றுக்குச் சென்றார். அதுதான் பிரமாண்ட இயேசுநாதர் சிலை உள்ள இடத்திற்குச் சென்றிருந்தார் சச்சின். அங்குள்ள பிரமாண்ட இயேசுநாதர் சிலைக்கு முன்பு அந்த சிலையைப் போலவே கைகளை அகல விரித்தபடி புன்னகை பூத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அதை தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
ரசிகர்கள் பலரையும் இந்த புகைப்படம் தொட்டு விட்டது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். ஒரு ரசிகர் என்ன சச்சின் ஒயிட் பால் (Wide ball) என்கிறாரா என்று கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications