Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் அழ மறந்த கதை...!

மும்பை: 1996ம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியுற்றதாக அறிவித்தபோது அணியின் பல வீரர்கள் அழுதனர். ஆனால் சச்சின் மட்டும் அழாமல் தைரியமாக இருந்ததாக முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஜவஹல் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.

சச்சின் தனது கடைசி டெஸ்ட் போட்டியை ஆடவுள்ளார். இதையடுத்து மலரும் நினைவுகளை முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிர்வாகிகளும் எடுத்து விட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது ஸ்ரீநாத், சச்சின் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சில முக்கிய நிகழ்வுகளை அவர் வெளியிட்டுள்ளார். சலாம் சச்சின் என்ற நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் சில சம்பவங்கள அசை போட்டார்...அதிலிருந்து சில.

சிலர் அழுதனர்..

சிலர் அழுதனர்..

அந்த போட்டியில் இந்தியா தோல்வியுற்றபோது சில வீரர்கள் அழுதனர். அது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. அவர்களது பெயர் எனக்கு சரியாக நினைவில்லை.

என்னால் முடியலையே...

என்னால் முடியலையே...

நான் எனது முகத்தை டவலால் பொத்திக் கொண்டேன். என்னால் அழ முடியவில்லை.

சச்சினைப் பார்த்தால்

சச்சினைப் பார்த்தால்

அப்போது அருகில் இருந்த சச்சினைப் பார்த்தேன். அவர் அமைதியாக இருந்தார். அவரிடம், என்னால் அழ முடியவில்லை. உங்களாலும் முடியவில்லையா என்று கேட்டேன்.

அட எதுக்குப்பா அழுதுக்கிட்டு...

அட எதுக்குப்பா அழுதுக்கிட்டு...

அதற்கு அவர், எதற்காக அழ வேண்டும். நாம் எல்லோரும் குறிக்கோளுடன் விளையாடினோம். தோல்வியுற்று விட்டோம். அதுவும் கூட நமக்கு ஒரு பாடம்தானே என்றார் அமைதியாக.

ஈடன் கார்டன் கலங்கி்ப் போன போட்டி

ஈடன் கார்டன் கலங்கி்ப் போன போட்டி

ஸ்ரீநாத் சொல்லும் போட்டியை ரசிகர்களால் மறக்க முடியாது. அந்தப் போட்டியில் நம்முடன் மோதியவர்கள் இலங்கை அணியினர். ஒரு கட்டத்தில் இந்தியா தோல்வியைத் தழுவும் நிலைக்குப் போனதால் ரசிகர்கள் வன்முறையில் இறங்கினர். இதனால் போட்டி நிறுத்தப்பட்டது. வன்முறை கட்டுக்கடங்காமல் போனதால், போட்டி கைவிடப்பட்டது. இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

ஸ்ரீநாத்துக்கு 3.. சச்சினுக்கு 65

ஸ்ரீநாத்துக்கு 3.. சச்சினுக்கு 65

இந்தப் போட்டியில் ஸ்ரீநாத் 3 விக்கெட் வீழ்த்தினார். சச்சின் 65 ரன்கள் எடுத்தார்.

Story first published: Tuesday, November 12, 2013, 17:19 [IST]
Other articles published on Nov 12, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+