Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விடுமுறையில் இருக்கும் கோலி, ரோகித்.. எப்போது தான் இந்திய அணிக்கு திரும்புவார்கள்? விவரம்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது அதிக ரசிகர்கள் இருக்கும் வீரர்கள் என்றால் அது விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தான். எப்படி தமிழ் சினிமாவில் தல தளபதி இருக்கிறார்களோ, அதைப்போல் இந்திய கிரிக்கெட்டுக்கு இருவரும் உள்ளனர்.ஏற்கனவே சர்வதேச டி20 போட்டதிலிருந்து ஓய்வு பெறுவதாக இருவரும் அறிவித்துள்ளது.

இது ரசிகர்களை சோகம் அடைய செய்திருக்கிறது. இந்த சூழலில் டி20 உலக கோப்பை வென்ற பிறகு இருவரும் தற்போது விடுமுறையில் இருக்கிறார்கள். ரோகித் சர்மா மனைவியுடன் வெளிநாட்டுக்கு சென்று விட்டதால், விராட் கோலி தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

ind vs zim virat kohli rohit sharma

இந்த நிலையில் இம்மாதம் இறுதியில் இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணி மூன்று டி20ழ் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த சூழலில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் தாங்கள் விளையாடப் போவதில்லை என்றும் தங்களுக்கு விடுமுறை வேண்டும் என்றும் ரோகித் சர்மா, விராட் கோலி பிசிசிஐயை தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

இலங்கை தொடருக்கு இவர்கள் வரவில்லை என்றால் பின் எப்போது தான் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுவார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. அதற்கான பதில் தற்போது பார்க்கலாம். இலங்கை தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணி அடுத்து செப்டம்பர் மாதம் தான் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறது.

இலங்கைத் தொடர் முடிந்து செப்டம்பர் 19ஆம் தேதி இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் டெஸ்ட் சென்னையில் நடைபெறுகிறது. எனவே இந்த போட்டிக்காக தான் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இனி இந்திய அணிக்கு திரும்புவார்கள் என தெரிகிறது.

இதன் காரணமாக விராட் கோலி, ரோஹித் சர்மா சுமார் இரண்டு மாதத்திற்கு மேல் ஓய்வில் இருக்கப் போகிறார்கள்.அதன் பிறகு செப்டம்பர் 19 மற்றும் 27ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற பிறகு மீண்டும் இரண்டு வாரம் ஓய்வு எடுத்துக் கொள்வார்கள்.அதன் பிறகு அக்டோபர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார்கள் இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவார்கள்.

Story first published: Thursday, July 11, 2024, 8:24 [IST]
Other articles published on Jul 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+