Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷரபோவா... இந்தப் போட்டோவைப் பார்த்தீங்களா....?

லண்டன்: சச்சின் டெண்டுல்கர் யார் என்று கேட்டு சர்ச்சைக்குள்ளானார் மரியா ஷரபோவா. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் சச்சின் தங்களுக்கு யார் என்பதை காட்டியுள்ளார் இந்திய வீரர் யுவராஜ் சிங்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த எம்சிசி மற்றும் ரெஸ்ட் ஆப் தி வேர்ல்ட் அணிகளுக்கு இடையிலான காட்சிப் போட்டியின்போது சச்சின் காலைத் தொட்டு வணங்கி சலசலப்பை ஏற்படுத்தினார் யுவராஜ்.

இந்தப் போட்டியின்போது ரெஸ்ட் ஆப் வேர்ல்ட் அணியில் இடம் பெற்றிருந்த யுவராஜ் சிங், எம்சிசி அணியின் கேப்டன் சச்சின், பீல்டிங்கில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஓடிச் சென்று சச்சின் காலைத் தொட்டு வணங்கினார். இதனால் கூச்சப்பட்டுப் போனார் சச்சின்.

132 ரன் குவித்த யுவராஜ்

132 ரன் குவித்த யுவராஜ்

இப்போட்டியில் யுவராஜ் சிங் சிறப்பாக ஆடினார். 134 பந்துகளைச் சந்தித்த அவர் 132 ரன்களைக் குவித்தார்.

கடவுளே கடவுளே...

கடவுளே கடவுளே...

தனது பேட்டிங்கின்போது திடீரென சச்சினை நோக்கிச் சென்ற யுவராஜ், அவரது காலைத் தொட்டு வணங்கினார். இதைப் பார்த்து சச்சின் கூச்சப்பட்டுப் போனார். யுவராஜை தனது கையால் முதுகில் கை வைத்து தூக்கி விலக்கி விட்டார்.

41வது ஓவரில்

41வது ஓவரில்

41வது ஓவர் முடிந்தபோது இந்த கும்பிடு போடு வைபவம் நடந்தது.

கைத்தட்டல் காதைப் பிளந்தது

கைத்தட்டல் காதைப் பிளந்தது

யுவராஜின் செய்கையால் லார்ஸ்ட் மைதானமே கலகலப்பாகிப் போனது. ரசிகர்கள் இந்தக் காட்சியைப் பார்த்து தொடர்ந்து சில விநாடிகளுக்கு கைதட்டி வரவேற்றனர்.

தாத்தா.. கடவுள்...

தாத்தா.. கடவுள்...

சச்சினை ஒருமுறை தனது தாத்தா போன்றவர் என்று கூறியிருந்தார் யுவராஜ். அதேபோல கடவுள் என்றும் அழைத்துள்ளார். தனது குரு என்றும் கூறி வருபவர் யுவராஜ் என்பது நினைவிருக்கலாம்.

2015ல் கலக்குவார் யுவராஜ்

2015ல் கலக்குவார் யுவராஜ்

சச்சினும் யுவராஜுக்கு தொடர்ந்து தார்மீக ஆதரவைத் தந்து வருகிறார். சமீபத்தில் கூட 2015 உலகக் கோப்பைப் போட்டியின்போது யுவராஜ் சிங் முக்கிய வீரராக ஜொலிப்பார் என்று கூறியிருந்தார்.

ஷரபோவாவுக்கு கொடுத்த பதிலடியா...

ஷரபோவாவுக்கு கொடுத்த பதிலடியா...

அத்தனை பேர் மத்தியில், உலகப் புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் திடீரென சச்சின் காலைத் தொட்டு யுவராஜ் வணங்கியது ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேளை சச்சின் யார் என்று கேட்ட மரியா ஷரபோவாவுக்கு இப்படி மறைமுகமாக யுவராஜ் பதில் கொடுத்தாரா என்றும் தெரியவில்லை.

Story first published: Sunday, July 6, 2014, 17:34 [IST]
Other articles published on Jul 6, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+