Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உம்ரான் மாலிக் எங்கே? வாய்ப்பு ஏன் தரவில்லை..ரொம்ப தவறான முடிவு.. தேர்வுக்குழுவுக்கு ஹர்பஜன் கேள்வி

மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் தவறான முடிவுகளை எடுத்துள்ளதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் குற்றச்சாட்டு உள்ளார்.

Recommended Video

Sandeep Lamichhane மீது பரபரப்பு புகார்! Suspend செய்த Nepal Board

ஆசிய கோப்பை தொடரை 8வது முறையாக இந்திய அணி வெல்லும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் இந்திய அணி தங்களை விட பலம் குன்றிய பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறியது.

 தவறான முடிவு

தவறான முடிவு

இந்திய அணியின் தோல்விக்கு காரணம் சரியான வீரர்களை தேர்வு செய்யாதது தான் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஆசிய கோப்பை போன்ற தொடரில் இந்திய அணி வெறும் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களை நம்பி மைதானத்திற்கு சென்றனர். இந்திய அணியின் பினிஷர் ரோலில் சிறப்பாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக் சம்பந்தமே இல்லாமல் அதிரடியாக நீக்கப்பட்டார்.

பந்துவீச்சில் குறை

பந்துவீச்சில் குறை

இதனால் இந்திய அணியின் பேட்டிங் கடுமையாக பாதிக்கப்பட்டது. பந்துவீச்சிலும் பும்ரா இல்லாததால் மற்ற வீரர்களின் பந்துவீச்சு சுத்தமாக ஏற்படவில்லை. குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் புவனேஸ்வரர் குமார் கடைசி போட்டியை தவிர மற்ற போட்டிகளில் ரன்களை வாரி கொடுத்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் தேர்வுகளுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார்.

ஹர்பஜன் சிங் கேள்வி

ஹர்பஜன் சிங் கேள்வி

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் உம்ரான் மாலிக்கிற்கு என் வாய்ப்பு தரவில்லை. பந்து நன்றாக ஸ்விங் செய்யும் தீபக் சாகரை ஏன் அணியில் சேர்க்கவில்லை. அவர் அங்கு இல்லையா? சொல்லுங்கள்.. ஏன் இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு தராமல் இருக்கிறீர்கள் ? தினேஷ் கார்த்திக்கை ஏன் அணியில் இருந்து நீக்கினீர்கள்.இந்த வீரர்களுக்கெல்லாம் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க மாட்டீர்களா என்று ஹர்பஜன் சிங் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

உம்ரான் மாலிக் எங்கே?

உம்ரான் மாலிக் எங்கே?

ஆஸ்திரேலிய ஆடுகளத்திற்கு ஏற்ற வேகப்பந்துவீச்சாளர் என்று உம்ரான் மாலிக் அறிமுகப்படுத்தப்பட்டார். அயர்லாந்துக்கு எதிரான தொடரில் கூட கடைசி ஓவரில் சிறப்பாக பந்து வீசி இந்திய அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை அவர் திடீரென்று இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்பொழுது வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் உம்ரான் மாலிக்கை பிசிசிஐ வீணடித்த வருவதாக ரசிகர்களும் குற்றம் சாட்டை வருகின்றனர்.

Story first published: Saturday, September 10, 2022, 11:07 [IST]
Other articles published on Sep 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+