இவ்வளவு கோடியா?.. எந்த அணியிடம் எவ்வளவு தொகை மீதம் உள்ளது.. தீவிரமடையும் ஐபிஎல் 2021 மினி - ஏலம்!
சிட்னி: ஐபிஎல் ரிட்டென்ஷன் முடிந்த நிலையில் தற்போது எந்த அணியிடம் எவ்வளவு தொகை மீதம் உள்ளது என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
2021 ஐபிஎல் தொடருக்கான ரிட்டென்ஷன் நேற்று நடைபெற்றது. ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைக்க போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
பெங்களூர், பஞ்சாப் போன்ற அணிகள் நிறைய வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. ஐபிஎல் மினி ஏலம் பிப்ரவரி 11ம் தேதி நடக்க உள்ள நிலையில் வீரர்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளனர்.

ரிலீஸ்
2021 ஐபிஎல்லில் ஹைதராபாத் அணியிடம்தான் குறைந்த தொகை உள்ளது. ஹைதராபாத் அணி பெரிய அளவில் வீரர்களை விடுவிக்கவில்லை. தற்போது நிலவரப்படி ஹைதராபாத் அணியிடம் 10.75 கோடி ரூபாய் உள்ளது.

எத்தனை
அதற்கு அடுத்தபடியாக கொல்கத்தா அணியும் பெரிய அளவில் வீரர்களை விடுவிக்கவில்லை. கொல்கத்தா அணியிடம் 10.85 கோடி ரூபாய் உள்ளது. அதேபோல் டெல்லி அணியிடம் 12.8 கோடி ரூபாய் உள்ளது. டெல்லி அணி ஒரு சில வெளிநாட்டு வீரர்களை மட்டும் வெளியிட்டுள்ளது.

மும்பை
இது போக மும்பை அணியிடம் 15.35 கோடி ரூபாய் உள்ளது. மும்பை அணி 4 வீரர்களை வெளியிட்டது. சிஎஸ்கே அணி கேதார் ஜாதவ் உட்பட 6 வீரர்களை வெளியிட்டது. இதனால் சிஎஸ்கேவிடம் 22.9 கோடி ரூபாய் மீதம் உள்ளது. அதே போல் ராஜஸ்தான் அணி ஸ்மித்தை வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தான்
ராஜஸ்தான் ராஜஸ்தான் அணியிடம் இதனால் 34.85 கோடி ரூபாய் மீதம் உள்ளது. அதேபோல் பெங்களூர் அணி 9 வீரர்களை வெளியிட்டது. பல வெளிநாட்டு வீரர்கள் வெளியிடப்பட்டனர். இதனால் பெங்களூர் அணியிடம் 35.7 கோடி ரூபாய் மீதம் உள்ளது.

மற்ற அணிகள்
ஆனால் மற்ற அணிகளை விட மிக அதிகமாக பஞ்சாப் அணியிடம் 53.2 கோடி ரூபாய் மீதம் உள்ளது. பஞ்சாப் அணி மேக்ஸ்வெல் உட்பட பல முக்கிய வீரர்களையே வெளியேவிட்டுள்ளது. இதனால் பஞ்சாப் அணியிடம் அதிக தொகை உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications