Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெழுகு டாலு நீ.. அழகு ஸ்கூலு நீ.. ரசிகர்களை கவர்ந்த மும்பை அணி வீராங்கனை.. WPL ல் ரூசிகரம்

மும்பை : மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை அணியில் இடம்பெற்ற வெளிநாட்டு வீராங்கனை அமீலா கேரை பார்த்து பல ரசிகர்களும் தங்களது இதயத்தை தொலைத்து விட்டார்கள்.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மகளிர் பிரீமியர் லீக் தொடர் நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சும் அளவுக்கு மும்பை அணி அதிரடியாக விளையாடியது.

முதல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 207 ரன்கள் எடுத்தது.

 அமீலா கேர்

அமீலா கேர்

இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 64 ரன்களில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி கேப்டனும், மும்பை அணிக்கு தலைமை தாங்கிய ஹர்மான்பிரீத் கவுரும் 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். ஆனால், ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து சென்றதோ நியூசிலாந்தை சேர்ந்த அமீலா கேர் தான்.

 ரசிகர்களை கவர்ந்தார்

ரசிகர்களை கவர்ந்தார்

நேற்று பேட்டிங்கில் நடுவரிசையில் களமிறங்கிய அமீலா 24 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.இதில் 6 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இதனையடுத்து தன்னுடைய அதிரடி ஆட்டம் குறித்து பேட்டி கொடுத்த போது ஹெல்மெட் இல்லாமல் இருந்த அமீலா கேரை பார்த்து பல ரசிகர்களும் அசந்து போய் விட்டார்கள்.

 கொள்ளையடித்த அமீலா

கொள்ளையடித்த அமீலா

இனி எங்களுடைய Crush லிஸ்டில் அமிலா கெருக்கு தனி இடம் கிடைத்துவிட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் இனி அமிலா கேருக்காகவே மும்பை இந்தியன்ஸ் விளையாடும் போட்டியை காண உள்ளோம் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் நேற்று இரவு முதலில் இருந்தே அமீலா கேர் தான் சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் உள்ளார்.

அமீலாவின் சாதனை

அமீலாவின் சாதனை

அமீலா எந்த அளவிற்கு அழகாக இருக்கிறாரோ, அதை விட பல மடங்கு திறமைச்சாலி. 16 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அமீலா கேர் சர்வதேச ஒருநாள் போட்யில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். பேட்டிங்கில் 2000 ரன்களுக்கு மேல் அடித்துள்ள அமீலா, பந்துவீச்சில் 135 விக்கெட்டுகளை சர்வதேச போட்டிகளை வீழ்த்தியுள்ளார்.

Story first published: Sunday, March 5, 2023, 10:47 [IST]
Other articles published on Mar 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+