Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியா? ரோகித் சர்மாவா? யார் சிறந்த வீரர்கள்.. பாகிஸ்தான் வீரர் பளீச் பதில்

லாகூர் : சர்வதேச கிரிக்கெட்டில் யார் சிறந்த வீரர் என்று விராட் கோலி ரசிகர்களுக்கும் ரோகித் சர்மா ரசிகர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படும்.

Recommended Video

Rohit Sharma குறித்து ஏன் வாய் திறக்க மாட்றீங்க? -Gavaskar கேள்வி *Cricket

எப்படி தமிழ் சினிமாவில் விஜய் ,அஜித் ரசிகர்கள் மோதிக் கொள்வார்களோ அதே போல் இந்திய கிரிக்கெட்டில் இரு வீரர்களின் ரசிகர்களும் மோதிக் கொள்வார்கள் .

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக்கிடம் கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு அவர் பளிச்சென்று ஒரு பதிலை அளித்துள்ளார்.

யார் சிறந்த வீரர்?

யார் சிறந்த வீரர்?

கிரிக்கெட் உலகில் சச்சின் சாதனையை உடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும் ஒரே வீரர் விராட் கோலி தான் என ஒரு காலத்தில் ரசிகர்கள் நம்பினர். சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி எழுபது சதங்களை இதுவரை விளாசியுள்ளார். ஆனால் ரோகித் சர்மாவும் முதல் மூன்று ஆண்டுகளில் சாதாரண வீரராக வலம் வந்தாலும், தொடக்க வீரராக வாய்ப்பு கிடைத்த பிறகு தனது அதிரடியை காட்டி வேற லெவலுக்கு சென்றார் .

டாப் 4 வீரர்கள்

டாப் 4 வீரர்கள்

அதிக இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மா பெற்றார். ஆனால் உலகின் டாப் நான்கு சிறந்த வீரர்கள் என Fabulos four அழைக்கப்படும் வீரர்களில் விராட் கோலி மட்டும் தான் இடம் பெற்றுள்ளார். அதில் ரோகித் சர்மா கிடையாது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விராட் கோலியின் கையே ஓங்கி இருக்கிறது.

விராட் கோலிக்கு இல்லை

விராட் கோலிக்கு இல்லை

இந்த நிலையில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இமாம் முல்ஹக் யார் சிறந்த வீரர் என்பதற்கு அளித்துள்ள பதில் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது . அவர் கூறியதாவது, ரோகித் சர்மாவிடம் இருக்கும் ஒரு திறமை விராட் கோலி இடம் கிடையாது. விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் விளையாடியதை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் ரோகித் சர்மா விளையாடும் சாட்கள் சிறப்பாக இருக்கும். அவர் ஷாட் அடிக்கும் போது பந்து ஸ்லோ மோஷனில் செல்வது போல் அவருக்கு தோன்றும் என நினைக்கிறேன்.

கடவுளின் பரிசு

கடவுளின் பரிசு

கிரிக்கெட்டில் டைமிங் ஷார்ட்கள் என்று சொல்வார்கள் அதை நான் ரோகித் சர்மாவை பார்த்த போது தான் உண்மையாக தெரிந்து கொண்டேன். ரோகித்துக்கு டைமிங் திறமை இறைவனால் கொடுக்கப்பட்ட பரிசு என நினைக்கிறேன். இதனால் ரோகித் சர்மா ஆட்டத்தின் போக்கையே ஒரு சில நொடிகளில் மாற்றி விடுவார். ரோகித் சர்மா செட் ஆனால் அவர் இஷ்டத்துக்கு ஷாட்களை அடிப்பார்.

எதை வைத்து சொல்கிறார்?

எதை வைத்து சொல்கிறார்?

2018 ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 238 என்ற இலக்கை இந்தியா 39 ஓவரில் எட்டியது. இதில் கேப்டனாக களம் இறங்கிய ரோகித் சர்மா சதம் விளாசினார். இதேபோன்று 2019 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா 149 ரன்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளாசினார். அதே போட்டியில் விராட் கோலி 85 ரன்கள் அடித்தார். இந்தப் போட்டிகளில் விளையாடிய இமாமுல்லாத் மூலம் தனது கருத்தை கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 14, 2022, 11:31 [IST]
Other articles published on Jul 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+