2018 ஐபிஎல் சாம்பியன் யார்.... சிஎஸ்கே, ஹைதராபாத் மோதல்!
Recommended Video

கொல்கத்தா: இதுவரை நடந்துள்ள 10 ஐபிஎல் சீசன்களில் ராஜஸ்தான், டெக்கான், சிஎஸ்கே, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் ஆகிய அணிகளே கோப்பையை வென்றுள்ளன. இந்த சீசனில் மீண்டும் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐபிஎல் 11வது சீசனின் பைனல்ஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு மும்பையில் நடக்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.
இதுவரை நடந்துள்ள 10 சீசன்களில் மும்பை அதிகபட்சமாக மூன்று முறை கோப்பையை வென்றது. சிஎஸ்கே, கொல்கத்தா தலா 2 முறை வென்றுள்ளன. ராஜஸ்தான், டெக்கான், ஹைதராபாத் அணிகள் தலா ஒருமுறை கோப்பையை வென்றுள்ளன.
அதேநேரத்தில், இதுவரை தான் விளையாடியுள்ள 9 சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய சாதனையைப் படைத்துள்ள சிஎஸ்கே, 7வது முறையாக பைனல்ஸ் முன்னேறியுள்ளது. இது ஒரு சாதனையாகும்.

2 பைனல்சிலும் கோப்பை
கொல்கத்தா தான் பங்கேற்ற 2 பைனல்ஸ்களிலும் கோப்பையை வென்றுள்ளது. டெக்கான், ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகளும் தாங்கள் பங்கேற்ற ஒரே பைனல்சில் கோப்பையை வென்று அசத்தியுள்ளன.

சிஎஸ்கே சாதனை
அதே நேரத்தில் தொடர்ந்து இரண்டு முறை கோப்பையை வென்ற சாதனை சிஎஸ்கேவிடம் உள்ளது. 2010, 2011ல் சிஎஸ்கே கோப்பையை வென்றது. தடை காரணமாக கடந்த 2 சீசன்களில் சிஎஸ்கே விளையாடவில்லை.

வெல்லாத அணிகள்
இந்த சீசனையும் சேர்த்து, ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய மூன்று அணிகள் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இதில் பெங்களூரு மூன்று முறை பைனல்ஸ் விளையாடியுள்ளது. பஞ்சாப் ஒருமுறை பைனல்ஸ் விளையாடியுள்ளது.

இதுவரை சாம்பியன்கள்
இதுவரை சாம்பியன் பட்டத்தை வென்ற அணிகள் - 2008 ராஜஸ்தான், 2009 டெக்கான், 2010, 2011ல் சிஎஸ்கே, 2012 கொல்கத்தா, 2013 மும்பை, 2014 கொல்கத்தா, 2015 மும்பை, 2016 ஹைதராபாத், 2017 மும்பை. 2018 - ?


Click it and Unblock the Notifications