Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்லுக்கு தடை கேட்கும் ஐபிஎஸ்.. டோணி மீது புகார் அளித்த அதே நபர்.. யார் இந்த சம்பத் குமார்?

Recommended Video

ஐபிஎல் போட்டிகளுக்கு தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல்!

சென்னை: ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜி சம்பத் குமார் என்ற ஐபிஎஸ் அதிகாரி வழக்கு தொடுத்து இருக்கிறார்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் இவர் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்படி உயர் நீதிமன்றம் தற்போது பிசிசிஐ அமைப்பிற்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

உடனடியாக சனிக்கிழமைக்குள் இந்த போட்டியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது . வரும் சனிக்கிழமை முதல் ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது.

சென்னையில் போட்டி

சென்னையில் போட்டி

சென்னையில் வரும் சனிக்கிழமை 2018 ஐபிஎல் தொடருக்கான முதல் போட்டி நடக்க உள்ளது. முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையில் நடக்க உள்ளது. தற்போது இந்த தொடருக்குத்தான் தடை கேட்டு வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஏன் வழக்கு

ஏன் வழக்கு

ஐபிஎல் போட்டியில் இன்னும் சூதாட்டம் ஒழிக்கப்படவில்லை என்று இந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது. ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் ஒழிக்கப்படும் வரை, இதை விளையாட கூடாது என்று ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் குறிப்பிட்டு உள்ளார்.

யார் இவர்

யார் இவர்

இவர்தான் 2013ம் வருடம் நடந்த ஐபிஎல் சூதாட்டம் பற்றிய வழக்கை விசாரித்தது. கிட்டி என்ற சூதாட்டம் செய்யும் நபருக்கும் டோணி, குருநாத் மெய்யப்பனுக்கும் இந்த சூதாட்டத்தில் தொடர்பு இருக்கிறது என்று இவர்தான் குற்றச்சாட்டு வைத்தார். அதன் காரணமாகவே சென்னை அணிக்கு அப்போது தடை விதிக்கப்பட்டது.

4 வருட தடை

4 வருட தடை

ஆனால் இதே சம்பத் குமார்தான் பின் ஐபிஎல் சூதாட்டகாரர்களிடம் இருந்து பணம் பெற்றதாக கூறப்பட்டது. இதனால் இவர் அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் நான்கு வருடத்திற்கு பிறகு தமிழக அரசால் மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட்டார்.

Story first published: Wednesday, April 4, 2018, 16:19 [IST]
Other articles published on Apr 4, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+