For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மருத்துவம் + மாடலிங்.. இன்ஸ்டாவில் அள்ளும் ஃபாலோயர்ஸ்.. 25 வயதில் உலகப்புகழ் பெற்ற ஜாம்பவானின் மகள்!

மும்பை: இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடிய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் இவர் படைத்த சாதனைகளை பற்றி பேசுவதற்கே பல நாட்களாகும். ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் 15 ஆயிரத்திற்கும் அதிக ரன்கள் என்று விளாசி தள்ளியவர்.

கிரிக்கெட் மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் எந்த சர்ச்சைகளிலும் சிக்காத ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் தான். தனது மனைவி அஞ்சலியை விட 6 வயது இளையவரான சச்சின் டெண்டுல்கர், 22 வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். இருவருக்கு சாரா டெண்டுல்கர் மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் என்று இரு பிள்ளைகள் உள்ளனர். அர்ஜுன் டெண்டுல்கர் தந்தையை போல் கிரிக்கெட்டை கையில் எடுத்துக் கொண்டார்.

Who is Sara Tendulkar? Daughter of Sachin Tendulkar who is also a influencer in Instagram

அதேபோல் சாரா டெண்டுல்கர் அம்மாவை போல் மருத்துவராக இருக்கிறார். மும்பை பள்ளிப்படிப்பை முடித்தாலும், மருத்துவ மேல் படிப்பை லண்டனில் படித்து வருகிறார். அப்படியே சச்சினுக்கு நேர் மாறாக சிறு வயதிலேயே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டவர். இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் உடன் காதலில் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன.

Who is Sara Tendulkar? Daughter of Sachin Tendulkar who is also a influencer in Instagram

இதனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் பின் தொடர்வதை நிறுத்தி கொண்டனர். ஆனால் சுப்மன் கில், சாராவை டேட் செய்கிறீர்களா என்ற கேள்விக்கு, இருக்கலாம் என்று பதில் அளித்து உறுதி செய்தார். ஆனால் சுப்மன் கில்லும் சகோதரியான ஷானில் இவரை பின் தொடர்ந்து வருகிறார். இதனால் இருவரும் காதலித்து வருவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

Who is Sara Tendulkar? Daughter of Sachin Tendulkar who is also a influencer in Instagram

அதேபோல் லண்டனில் உள்ள சாரா டெண்டுல்கர், இன்ஸ்டாகிராமை தவிர்த்து வேறு எந்த சமூக வலைதளத்தையும் பயன்படுத்துவதே இல்லை. அதில் மட்டும் சாரா டெண்டுல்கர் 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்திருக்கிறார். மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வரும் சாரா டெண்டுல்கர், பல கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார்.

அதேபோல் சில பிரபலமல்லாத அழகு சாதன பொருட்களை இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்து, இன்ஃபுளூயன்சராகவும் சாரா டெண்டுல்கர் மாறியுள்ளார். ஒரே நேரத்தில் மாடலிங், மருத்துவம் என்று பயணித்து வரும் சாரா டெண்டுல்கர், விரைவில் விளம்பர நடிகையாகவும் மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Story first published: Monday, August 14, 2023, 15:20 [IST]
Other articles published on Aug 14, 2023
English summary
Sara Tendulkar, Daughter of Sachin Tendulkar who has 4 Million instagram followers. Also she is a instagram influencer and studying Medicine From London.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+