அடுத்த ஜடேஜா!!.. யார் இந்த சௌரப் குமார்.. இலங்கை தொடரில் திடீர் வாய்ப்பு.. அசரவைக்கும் ரெக்கார்ட்!
மும்பை: இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் திடீரென சௌரப் குமார் என்ற இளம் வீரர் சேர்க்கப்பட்டுள்ளது, ரசிகர்களுக்கு வியப்பை கொடுத்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.
பிப்.25ம் தேதியன்று தொடங்கும் இந்த தொடருக்கான இந்திய அணியை இன்று பிசிசிஐ வெளியிட்டது.

சௌரப் குமார் யார்?
இதில் அனைவருக்கும் ஆச்சரியம் கொடுக்கும் விஷயம் என்னவென்றால் இந்திய அணியில் சௌரப் குமார் என்ற இளம் வீரர் சேர்க்கப்பட்டிருப்பது தான். அணியில் ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகிய 3 முன்னணி ஸ்பின்னர்கள் உள்ள போதும் சௌரப் குமார் என்ற இளம் ஆல்ரவுண்டரை அணிக்குள் சேர்த்துள்ளது பிசிசிஐ. இவர் யார்? எப்படி நேராக இந்திய அணிக்குள் இடம் கிடைத்தது என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

அடுத்த ஜடேஜாவா?
சௌரப் குமார் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர். 28 வயதாகும் இவர் சுழற்பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என ஜடேஜாவை போன்றே திறமைப்படைத்தவை. ஐபிஎல் தொடரில் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக தோனியின் கீழ் விளையாடியுள்ளார். கடந்த 2014 -15ம் ஆண்டு அந்த உ.பி அணிக்காக அறிமுகமான சௌரப், கடந்த 2 - 3 ஆண்டுகளாக அட்டகாசமான ஃபார்மில் இருக்கிறார். 2018/19 ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பையில் 51 விக்கெட்கள், 2019/2020 ரஞ்சிக்கோப்பையில் 44 விக்கெட்கள் என அசத்தியுள்ளார்.

அசரவைத்த புள்ளிவிவரம்
இதுவரை மொத்தமாக 46 முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள சௌரப் 196 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். அதாவது சராசரியாக 24.15 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றுகிறார். இதில் 16 முறை 5 விக்கெட் ஹௌல், மற்றும் 6 முறை ஒரே போட்டியில் 10 விக்கெட்களையும் கைப்பற்றியவர் என்ற பெருமை உள்ளது.

பேட்டிங் விவரம்
சௌரப் குமார் பேட்டிங்கிலும் திறம்பட செயல்படக்கூடியவர். இதுவரை 46 போட்டிகளில் விளையாடி 1, 572 ரன்களை குவித்துள்ளார். இதில் 2 சதங்களும், 8 அரைசதங்களும் அடங்கும். அவரின் பேட்டிங் சராசரியே 29.11 ஆகும். இவரை அணிக்குள் எடுத்தால் மிகப்பெரிய ஆல்ரவுண்டராக வலம் வருவார் என்பதால் பிசிசிஐ எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications