Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG டெஸ்ட்டில் தோனியை முந்திய கோலி, ரோஹித்.. அதிக வெற்றி பெற்றுக் கொடுத்த கேப்டன் யார்?

லண்டன்: இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதுமே இந்தியா-ஆஸ்திரேலியா விளையாடும் டெஸ்ட் தொடர்களுக்குத்தான் இந்திய ரசிகர்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் இங்கிலாந்து அணிக்கு எதிராகத்தான் இந்திய அணி அதிக சவால்களை சந்திப்பது வழக்கம்.

அதன்படி, இந்திய கேப்டன்களில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில் நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. ஏனெனில், எம்.எஸ். தோனிதான் இங்கிலாந்துக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருப்பார் என்ற ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் உண்மையில், தோனி இங்கிலாந்துக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த கேப்டன்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் தான் இருக்கிறார்.

Virat Kohli MS Dhoni Rohit Sharma Indian Cricket team IND vs ENG

முதல் இடத்தில் விராட் கோலி இருக்கிறார். இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த கேப்டனாக அறியப்படும் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிராக 18 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். அதில் பத்து வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார். மேலும் அவரது கேப்டன்சியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 6 தோல்விகளை மட்டுமே சந்தித்து இருக்கிறது. இந்திய மண்ணில் விராட் கோலி தலைமையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்து இருக்கிறது.

இரண்டாவது இடத்தில் ரோஹித் சர்மா இருக்கிறார். ரோஹித் சர்மா இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கேப்டனாக செயல்பட்டு, அதில் நான்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இந்த டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்து மூன்றாவது இடத்தில் தோனி இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக 15 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். அதில் வெறும் மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்றுக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தோனி தலைமையில் 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4 - 0 என தோல்வியடைந்து இருந்தது.

2014 ஆம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அதில் 3 - 1 என இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. 2012-13 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, அதில் 2 - 1 என இந்திய அணியை வீழ்த்தியது. இந்த மூன்று தொடர்களிலும் தோனி கேப்டனாக இருந்து தோல்வியை மட்டுமே பெற்றுக் கொடுத்தார்.

2008-09 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என வென்றது. அது மட்டுமே இங்கிலாந்துக்கு எதிராக தோனி கேப்டனாக வென்று கொடுத்த ஒரே டெஸ்ட் தொடராகும்.

Story first published: Monday, June 16, 2025, 13:22 [IST]
Other articles published on Jun 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+