Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணி எது தெரியுமா? பொல்லார்ட்டை கலாய்த்து தள்ளிய பிராவோ.. சண்டையை பாருங்க!

மும்பை: சென்னை மற்றும் மும்பை அணிகள் எந்த அணி சிறந்த அணி என்று ரசிகர்களை போல மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட்டும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் டுவைன் பிராவோவும் ஜாலியாக ரசிகர்களை போல் சண்டை போட்டுக்கொண்டுள்ளது ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஐபிஎல் தொடரில் 5வது முறையாக சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் சென்னை அணி விளையாடிய 14 சீசன்களில் 5 முறை கோப்பையை வென்றதோடு, 10 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேபோல் 12 முறை பிளே ஆப் சுற்றுக்கும் தகுதிபெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 2 முறை மட்டுமே சிஎஸ்கே அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

Who is the Most successful team in IPL History? Dwayne Bravo and Pollard Video created a debate among fans

இதனால் ஐபிஎல் தொடரில் சென்னை அணியே சிறந்த அணி என்று சிஎஸ்கே ரசிகர்களும், அப்படியெல்லாம் இல்லை, மும்பை அணியே சிறந்த அணி என்று பல்தான் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சண்டை போட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே இதுபோன்ற சண்டைகள் சாதாரணம் என்றாலும், அந்தந்த அணி பயிற்சியாளர்களும் இதுபோல் சண்டை போட்டுக் கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேறுயாரும் அல்ல சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் பிராவோவும், மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட்-ம் தான் விவாதித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் ஒரே வீடியோவில் பேசுகையில், மும்பை அணியே ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணி என்று பொல்லர்ட் கூறுகிறார். ஆனால் சாதனைகளும் கோப்பைகளும் சென்னை அணியே வெற்றிகரமான அணி என்று சொல்கிறது. அதேபோல் பொல்லார்ட், அதிக கோப்பைகளை வென்றவர்கள் யார் என்றும் பேச விரும்புகிறார்.

Who is the Most successful team in IPL History? Dwayne Bravo and Pollard Video created a debate among fans

அப்படி பார்த்தாலும் ஒட்டுமொத்தமாக 17 கோப்பைகளை ஒரு வீரராக வென்றிருக்கிறேன். ஆனால் பொல்லார்ட் அனைத்து லீக் தொடர்களிலும் சேர்த்து 15 கோப்பையைகளை தான் வென்றிருக்கிறார். அதனால் எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று பிராவோ சொல்கிறார். இருவரும் செல்லமாக கலாய்த்து கொள்ளும் வீடியோ சென்னை மற்றும் மும்பை அணி ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

Story first published: Friday, June 2, 2023, 8:06 [IST]
Other articles published on Jun 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+