Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்.. இவரை அடிச்சுக்க ஆள் இல்லை - மலைக்க வைக்கும் சொத்து!

மும்பை: உலகில் பணக்காரர் விளையாட்டு வீரர்கள் பற்றி தெரிந்து வைத்திருப்பீர்கள். உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலை போர்பஸ் (Forbes) அமெரிக்க வணிக பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் யார் என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்ள முடியும். அதன்படி, உலகின் டாப் 10 பணக்கார விளையாட்டு வீரர்கள் அடங்கிய பட்டியலை ஃபோர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்டது.

விளையாட்டு ஊதியம், விளம்பரம், சந்தை மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை உள்ளடக்கி இந்த லிஸ்ட் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக, 'Forbes' எனும் பிராண்டில் தங்கள் பெயர் வருவதையே விளையாட்டு வீரர்கள் பெருமையாக எண்ணுவார்கள்.

கொட்டும் கோடிகள்

கொட்டும் கோடிகள்

2021 ஆண்டுக்கான டாப் 10 பணக்காரர் விளையாட்டு வீரர்கள் பட்டியலில், கலப்பு தற்காப்பு கலை வீரர் Conor McGregor 180 மில்லியன் டாலர் வருமானத்துடன் முதலிடம் பிடித்திருந்தார். கடந்தாண்டு டாப் லிஸ்டில் இருந்த ரொனால்டோ, மெஸ்ஸி, ஃபெடரர் என அனைவரையும் பின்னுக்கு தள்ளி, முதன் முதலாக முதலிடம் பிடித்தார் McGregor. இராண்டாம் இடத்தை பிடித்தது லயோனல் மெஸ்ஸி. வருமானம் 130 மில்லியன் டாலர். சரியாக McGregor-ஐ விட 50 மில்லியன் டாலர் குறைவு. மூன்றாம் இடத்தில் கிறிஸ்டியானால் ரொனால்டோ இருக்கிறார். இவரது வருமானம் 120 மில்லியன் டாலர்.

தி கிரேட் சச்சின்

தி கிரேட் சச்சின்

சரி.. இவர்கள் சம்பாதிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். கிரிக்கெட்டில் யார் டாப் என்பதே நம்மூர் ரசிகர்களின் கேள்வி. இரண்டு உலகக் கோப்பைகளை பெற்றுத் தந்த தோனியா? நவீன கிரிக்கெட்டின் ரன் மெஷின் விராட் கோலியா? மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரா? அல்லது வேறு எந்த நாட்டையாவது சேர்ந்த கிரிக்கெட் வீரரா? இதற்கான ஒரே பதில் அவர் இந்தியர் தான். அது தோனியும் அல்ல, கோலியும் அல்ல.. சச்சின் டெண்டுல்கர்.

தொடரும் வருமானம்

தொடரும் வருமானம்

இது போர்ப்ஸ் வெளியிட்ட வருடாந்திர பணக்கார வீரர்கள் பட்டியல் அல்ல. Sportingfree.comன் அறிக்கை படி, உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலாகும். இதில், 'கிரிக்கெட் கடவுள்' சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.1090 கோடி. கிரிக்கெட்டில் இருந்து எப்போதோ ஓய்வு பெற்றுவிட்டாலும், இன்னும் பல பிராண்ட்கள் மூலமும், ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் மூலமும் வருமானம் ஈட்டி வருகிறார்.

கோலிக்கு வாய்ப்பு

கோலிக்கு வாய்ப்பு

இன்னும் சொல்லப்போனால், சச்சினின் கிரிக்கெட் ஓய்வு இன்னும் எந்த வகையிலும் வருமானத்தையோ, மதிப்பையோ குறைக்கவில்லை. இந்த நிமிடம் வரை அவரது வேல்யூ உச்சத்தில் உள்ளது. தோனி, கோலி, ரோஹித் என்று எத்தனையோ சூப்பர் ஸ்டார்கள் வந்தாலும், சச்சின் எனும் உயரத்தை அவர்களால் பிடிக்க முடியவில்லை. அதில், ஓரளவுக்கு சாதித்தது தோனி மட்டுமே. எனினும், எதிர்காலத்தில் கோலி எப்பேர்ப்பட்ட சாதகனைகளையும் தகர்த்து விடும் வாய்ப்பும் இருக்கிறது.

Story first published: Friday, May 21, 2021, 14:11 [IST]
Other articles published on May 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+