For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜாக் கல்லீஸ் ஓய்வு கிரிக்கெட்டுக்கு பெரும் இழப்பு: முன்னணி வீரர்கள் உருக்கம்

By Veera Kumar

டெல்லி: அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும், ஜாக் கல்லீஸ் ஓய்வு பெறுவது குறித்து முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலரும் உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளனர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற, மற்றும் விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்கள் தங்களது டிவிட்டர் வலைத்தளத்தில், இதுகுறித்து கருத்து தெரிவித்தனர்.

கெவின் பீட்டர்சன்

கெவின் பீட்டர்சன்

தர்க்கப்படி பார்த்தால், கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச்சிறந்த வீரர் இப்போதுதான் ஓய்வு பெறுகிறார். கல்லீசை கிரிக்கெட், மிகவும் தவறவிடப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஜெயவர்த்தனே

ஜெயவர்த்தனே

"மிகச்சிறந்த கிரிக்கெட் வாழ்க்கையை கொண்ட ஜாக் கல்லீசுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் தலைமுறையில் கண்ட மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் கல்லீஸ்" என்று இலங்கையின் மகேலா ஜெயவர்த்தனே புகழாரம் சூட்டியுள்ளார்.

கில்கிறிஸ்ட் அதிரடி

கில்கிறிஸ்ட் அதிரடி

"அருமையான கிரிக்கெட்டை அளித்த கல்லீசுக்கு வாழ்த்துக்கள். எப்போதுமே சிறந்த வீரர் ஜாக் கல்லீஸ்தான்" என்று ஆஸ்திரேலிய முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

டுப்ளெசிஸ் உருக்கம்

டுப்ளெசிஸ் உருக்கம்

தென் ஆப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேன் டுப்ளெசிஸ் கூறுகையில் "ஜாக் கல்லீசுடன் ஆடுகளத்தில் ஒன்றாக விளையாடியதையே நான் பெருமையாக கருதுகிறேன். மிகச்சிறந்த அனுபவசாலி கிரிக்கெட் வீரர் அவர்" என்று தெரிவித்துள்ளார்.

வி.வி.எஸ். லட்சுமணன்

வி.வி.எஸ். லட்சுமணன்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த வி.வி.எஸ். லட்சுமணன் கூறுகையில் "கிரிக்கெட் உலகம் கல்லீஸ் விளையாடாமல் தவிக்கப்போகிறது. கல்லீஸ் மிகச்சிறந்த ஆட்டக்காரர் என்பதுடன், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க தெரிந்த வித்தைக்காரர்" என்று பாராட்டியுள்ளார்.

நாங்க மிஸ் பண்ண மாட்டோம்

நாங்க மிஸ் பண்ண மாட்டோம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் டிவிட்டர் பக்கத்தில் "சர்வதேச கிரிக்கெட்டுக்கு அவர் திரை போட்டிருக்கலாம். ஆனால் நாம் இனி இளம் ஊதா மற்றும் தங்க வண்ண ஆடையில் (கொல்கத்தா அணியின் சீருடை ) அவரை பார்க்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Thursday, July 31, 2014, 16:31 [IST]
Other articles published on Jul 31, 2014
English summary
Former and present cricketers hailed South Africa's Jacques Kallis as the "greatest all-rounder" after he announced his retirement from international cricket on Wednesday (July 30). The players used the micro-blogging site Twitter to salute the "legend". Kallis bid adieu to international cricket but will continue to play for Sydney Thunder and Kolkata Knight Riders in Twenty20 leagues.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+