
ஆரம்ப புள்ளி
ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. அப்போது கங்குலி, சேத்தன் சர்மா, கோலி என மூன்று முக்கிய தலைகளுக்கும் மோதல் ஏற்பட்டது. கேப்டன்ணிப் விவகாரம் தொடர்பாக கோலியிடம் பேசினோம் என்று கங்குலி கூற, அப்படி எல்லாம் யாரும் என்னிடம் பேசவில்லை என்று கோலி தெரிவித்தார்.

என்ன காரணம்
இதனால் ரசிகர்களின் கோபத்துக்கு கங்குலி ஆளாகினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சேத்தன் சர்மா, கேப்டன் பதவியை விட்டு செல்ல வேண்டாம் என்று தேர்வுக்குழு சார்பாக தாம் பேசினேன் என்று கூறினார். அப்போதிலிருந்தே கோலி, சேத்தன் சர்மாவுக்கு ஒத்து போகவில்லை

சேத்தன் சர்மா பேச்சு
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சேத்தன் சர்மா, தற்போது நாட்டிலேயே நம்பர் 1 சிறந்த கிரிக்கெட் வீரர் என்றால் அது ரோகித் சர்மா தான் என்று பேசியுள்ளார். ரோகித் சர்மா தற்போது நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். இளம் வீரர்களை பக்குவப்படுத்தும் பணி ரோகித் சர்மா போன்றோர் கேப்டனாக இருந்தால், அது எளிதாக இருக்கும் என்று சேத்தன் சர்மா பாராட்டினார்.

கடுப்பான ரசிகர்கள்
சேத்தன் சர்மாவின் இந்த பேச்சு விராட் கோலி ரசிகர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது. அதிக ரன்கள், அதிக சதம், அதிக வெற்றி என்று அனைத்திலும் நம்பர் 1 வீரராக விராட் கோலி இருக்கும் போதே, ரோகித் சர்மாவை நம்பர் 1 வீரர் என்று எப்படி கூறலாம் என்று விமர்சித்து வருகின்றனர். மேலும் இளம் வீரர்களை கேப்டனாக்கும் முயற்சியில் கோலி ஈடுபடவில்லை என்பதை போல் சேத்தன் சர்மா கூறினார்.


Click it and Unblock the Notifications











