Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூப்பர் ஆஃபரா இருக்கே.. ரூ.1 கோடி அபராதத்தை கோலி கட்ட மாட்டார்.. இதுக்கு பின்னாடி வேற விசயம் இருக்கு

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கவுதம் கம்பீர், விராட் கோலியும் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன உல் ஹக் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் ஐபிஎல் நன்னடத்தை விதிகளுக்கு எதிராக நடந்து கொண்டதால் விராட் கோலிக்கு ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் அபராதமும், கம்பீருக்கு 20 லட்சம் ரூபாய் அபராதமும்,நவீன் உல் ஹக்கிற்கு, ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Who will pay the fine imposed by bcci for players behaviours in ipl

இதுபோன்று விராட் கோலி ஏற்கனவே சிஎஸ்கே ஆட்டத்தில் அத்துமீறி நடந்து கொண்டதால் 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இப்படி விதிக்கப்படும் அபராதத்தை வீரர்கள் எப்படி செலுத்துவார்கள் என்பது குறித்து தற்போது தகவல் கசிந்துள்ளது. இந்திய அணி போன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டால் போட்டி ஊதியத்தில் இருந்து பிடிக்கப்படுமாம்.

ஆனால் ஐபிஎல் போன்ற தொடர்களில் வீரர்கள் அணியின் வெற்றிக்காக பாடுபடுகிறார்கள். இதன் காரணமாக ஐபிஎல் நிர்வாகம் விதிக்கும் அபராதத்தை வீரரின் ஊதியத்தில் இருந்து பிடிக்காமல் அணி நிர்வாகமே பணத்தை செலுத்தி விடுமாம். அப்போதுதான் வீரர்கள் தங்கள் அணி மீது மேலும் பற்று கொண்டு விளையாடுவார்கள் என்பதால் இந்த முடிவை ஒவ்வொரு லீக் அணிகளும் கடைபிடிக்கிறதாம்.

Who will pay the fine imposed by bcci for players behaviours in ipl

இதுவரை ஐபிஎல் வரலாற்றில் நிறைய வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் அந்த வீரர்களின் ஊதியம் பிடிக்காமல். அணி நிர்வாகம் தான் தங்களது சொந்த பணத்தில் இருந்து அபாரதம் கட்டுவார்களாம். தற்போது விராட் கோலி விவகாரத்திலும் கௌதம் கம்பீர் விவகாரத்திலும் அந்தந்த அணி நிர்வாகம் தான் தங்களுடைய வீரர்களுக்காக பணத்தை கொடுக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் ரசிகர்கள் அடடா இது சூப்பர் ஆப்பரா இருக்கே? அதனால் தான் விராட் கோலி அனைத்து போட்டிகளிலும் எதிரணி வீரர்களை வம்புக்கு இழுக்கிறார் போலும் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Thursday, May 4, 2023, 17:53 [IST]
Other articles published on May 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+