Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று மோதல்

IPL TODAY: கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதல்... மன்கட் முறை தொடருமா?

மொகாலி:ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் மன்கட் அவுட், உள்வட்டத்துக்குள் 3 பீல்டர்களை நிறுத்தியது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது 3-வது ஆட்டத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.

Who will win Kings XI Punjab vs Mumbai Indians IPL Match Today

பஞ்சாப் அணி இம்முறை ஐபிஎல் தொடரை சர்ச்சையுடன்தான் தொடங்கியது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கேப்டன் அஸ்வின், பட்லரை மன்கட் முறையில் ரன்அவுட் செய்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

விதிப்படியே அஸ்வின் செயல்பட்டாலும், ஆட்ட உணர்வை மீறிவிட்டதாக பலர் குற்றம்சாட்டினர். அதே மனநிலையுடன் கொல்கத்தா அணியுடன் 2வது ஆட்டத்தில் பஞ்சாப் அணி மோதியது.

அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் சொந்த மைதானமான மொகாலியில் இந்த சீசனில் தனது முதல் ஆட்டத்தை, மும்பைக்கு எதிராக இன்று விளையாடுகிறது பஞ்சாப் அணி.

மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. 2வது ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. 3வது போட்டியில் பஞ்சாபை வீழ்த்த மும்பை அணி வியூகம் வைத்துள்ளது.

Story first published: Saturday, March 30, 2019, 11:01 [IST]
Other articles published on Mar 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+