For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL - கடைசி ஓவரில் சிஎஸ்கேக்கு பெனால்டி.. பரபரப்பாக சென்ற ஆட்டம்.. தோனியின் யுத்தியில் சிக்கிய LSG

சென்னை : ஐபிஎல் 16வது சீசனில் லக்னோ அணிக்கு எதிரான பரபரப்பான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ், கான்வே ஜோடி அபாரமாக விளையாடியது.

கெய்க்வாட் லக்னோ பந்துவீச்சை சிதற அடிக்க, 25 பந்துகளில் அரைசதம் எடுத்தார். கான்வேவும் சிக்சர்களை பறக்கவிட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தது. ருதுராஜ் 31 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, கான்வே 47 ரன்களில் வெளியேறினார்.

CSK beat LSG by 12 runs and registered the first win of IPL 2023

இதனையடுத்து களமிறங்கிய சிவம் துபே முதலில் மெதுவாக விளையாடினாலும், பிறகு அதிரடியாக 3 சிக்சர்களை அடிக்க16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். மொயின் அலி தன் பங்கிற்கு 19 ரன்கள் சேர்க்க, அம்பத்தி ராயுடு தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 பந்தில் 27 ரன்கள் சேர்த்தார். இறுதியில் தோனி 2 சிக்சர்களை பறக்கவிட, சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் சேர்த்தது.

218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி தொடக்க வீரர் மெயர்ஸ் ரூத்ரதாண்டவம் ஆடினார். சிஎஸ்கே வேகப்பந்துவீச்சை மெயர்ஸ் சிக்சரும், பவுண்டரியாகவும் அடிக்க லக்னோ அணி, இன்றைய ஆட்டத்தில் எளிதில் வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

சுத்தி சுத்தி வந்தீக.. லக்னோவிற்கும் லக் நோ! தோனி செய்த சின்ன மாற்றம்! சிஎஸ்கேவிற்கு உதவியது எப்படி?

5 ஓவர்களில் எல்லாம் 70 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டதால் தோனி உடனடியாக சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்த தொடங்கினார். இதன் மூலம் பெருக்கெடுத்து ஓடிய ரன் வெள்ளத்தை தோனி சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து ஷட்டர் போட்டு தடுத்தார். ஸ்பின்னர் பந்துகளை தூக்கி அடித்து லக்னோ வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மெயர்ஸ் 22 பந்தில் 53 ரன்களும், ராகுல் 20 ரன்களும், கேஎல் ராகுல் 2 ரன்களும், குர்னல் பாண்டியா 9 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரான் ஜோடி மீண்டும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதனால் மீண்டும் லக்னோ வெற்றி பாதைக்கு திரும்பியது.

அப்போது மோயின் அலி மீண்டும் பந்துவீச்சில் ஸ்டோனிஸ் விக்கெட்டை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து நிக்கோலஸ் பூரான் சிக்சர்களை பறக்கவிட மீண்டும் போட்டியில் பரபரப்பு தொற்றி கொண்டது. எனினும் முதல் ஓவரில் ரன்களை வாரி கொடுத்த தேஷ்பாண்டே, அதன் பிறகு கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.

CSK beat LSG by 12 runs and registered the first win of IPL 2023

இதற்கு பலனாக தேஷ்பாண்டே , நிக்கோலஸ் பூரான் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் பிறகு ஆட்டம் சிஎஸ்கேவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இதனையடுத்து கடைசி ஓவரில் 28 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதால், கடைசி ஓவரில் சிஎஸ்கே பெனால்டி விதிக்கப்பட்டது. அதாவது கடைசி ஓவரில் பவுண்டரி லைனில் 4 ஃபில்டர்கள் தான் நிறுத்தப்பட்டார்கள்.இதில் முதல் பந்தை தேஷ்பாண்டே நோ பாலாக வீசினாலும், பிறகு சுதாரித்து கொண்டு செயல்பட்டார். எனினும் கடைசி 2 பந்தில் 10 ரன்களை சிஎஸ்கே விட்டு கொடுத்தும், சிஎஸ்கே அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் கடைசியாக சேப்பாக்கத்தில் விளையாடிய 22 போட்டிகளில் சிஎஸ்கே 19 போட்டிகளில் வென்றது.

Story first published: Monday, April 3, 2023, 23:48 [IST]
Other articles published on Apr 3, 2023
English summary
CSK beat LSG by 12 runs and regestired the first win of IPL 2023IPL - கடைசி ஓவரில் சிஎஸ்கேக்கு பெனால்டி.. பரபரப்பாக சென்ற ஆட்டம்.. தோனியின் யுத்தியில் சிக்கிய LSG
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+