Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் அடித்த பவுண்டரிக்கு ஏன் ரன் தரவில்லை.. ரசிகர்களை குழப்பும் ஐசிசி விதி.. என்ன நடந்தது?

மெல்போர்ன்: டி20 உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐசிசியின் குழப்பமான விதியால் இந்திய அணிக்கு கூடுதலாக 3 ரன்கள் கிடைக்காமல் போனது தெரிய வந்தது.

கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற போட்டியில் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வந்தது.

அப்போது கடைசி 1 பந்தில் 2 ரன் தேவை என கருதப்பட்ட நிலையில், அந்த பந்து ஓயிடாக மாறியது. இதனால் கடைசி பந்தில் 1 ரன் தேவை என இலக்கு மாறியது.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

அப்போது, அஸ்வினை கவர் திசையில் அடித்து ரன் ஓடும்மாறு கோலி அறிவுறுத்தினார். ஆனால், அஸ்வின் 30 மீட்டர் சர்கிளுக்கு வெளியே நேராக பந்தை தூக்கி அடித்தார். அந்த பந்து ஃபில்டர்களை தாண்டி விழுந்ததால் அந்த பந்து பவுண்டரிக்கு தான் சென்றது. ஆனால், இந்திய அணிக்கு ஒரு ரன் மட்டும் தரப்பட்டது. மேலும் 3 ரன்கள் தரப்படவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

விதி என்ன சொல்கிறது?

விதி என்ன சொல்கிறது?

இதற்கு காரணம், பந்து பவுண்டரி செல்வதற்கு முன்பே அஸ்வினும், விராட் கோலியும் ஒரு ரன் ஓடி விட்டதால் அப்போதே இந்தியா வெற்றி பெற்றதால், பவுண்டரி லைனில் கருத்து கொள்ளப்படவில்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது, வெற்றிக்கு 1 ரன் தான் தேவை என்ற போது அது நோ பாலாக இருந்தால், அப்போதே போட்டி முடிந்துவிடும்.

சேவாக்கிற்கு நடந்தது என்ன?

சேவாக்கிற்கு நடந்தது என்ன?

இந்த குழப்பமான விதியால் ஒரு முறை சேவாக் தனது சதத்தை பூர்த்தி செய்ய முடியாமல் போனது நினைவில் இருக்கலாம். இலங்கைக்கு எதிரானஆட்டத்தில் சேவாக் 99 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது வெற்றிக்கு ஒரு ரன் தான் தேவைப்பட்டது. அப்போது சூரஜ் ரந்தீவ் வேண்டுமேன்றே நோ பால் வீச, சேவாக் அந்த பந்தை சிக்சர் அடித்தார்.

விதியை மாற்ற கோரிக்கை

விதியை மாற்ற கோரிக்கை

ஆனால் நோ பால் போடப்பட்டு தருணத்திலேயே மேட்ச் முடிந்துவிட்டதால் சேவாக்கிற்கு 6 ரன்கள் தரப்படவில்லை. இதனால் சேவாக்கின் சதம் மிஸ் ஆனது. தற்போது அதே போல் அஸ்வினுக்கும் அந்த பவுண்டரி தரப்படாதது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த குழப்பமான விதியை ஐசிசி தீர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Story first published: Tuesday, October 25, 2022, 18:39 [IST]
Other articles published on Oct 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+