Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை டெஸ்ட்டில் அஸ்வினை நீக்கக் கூடாது..! நீக்கினால் அது வன்மம்..!! காரணம் ஏன்?

மும்பை; இந்தியா vs நியூசிலாந்துக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெறுகிறது.

மும்பையில் மழை பெய்து வருகிறது. மேலும் ஆடுகளத்தில் புற்கள் தென்படுவதால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதனால் இந்திய அணி 2 சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் 3 வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

விராட் கோலி

விராட் கோலி

ஏற்கனவே இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி, அங்கு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகிளில் விளையாடிய போத அஸ்வின் ஓரங்கட்டப்பட்டார். அஸ்வினை அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து புறந்தள்ளினார் விராட் கோலி. தற்போது டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருக்கும் விராட் கோலி, மீண்டும் அஸ்வினை ஓரங்கட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

ஃபார்ம்

ஃபார்ம்

கான்பூர் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து அஸ்வின் 70 ரன்கள் அடித்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.ஜடேஜா 50 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அக்சர் பட்டேல் 31 ரன்களை சேர்த்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இப்படி 3 சுழற்பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்படுவதால் யாரை அணியிலிருந்து நீக்கினாலும் தலைவலியே..

ராசியான மைதானம்

ராசியான மைதானம்

வான்கடே மைதானம் அஸ்வினுக்கு எப்போதுமே ராசியான மைதானமாக கருதப்படுகிறது. இங்கு தான் அஸ்வின் தனது முதல் டெஸ்ட் சதத்தை 2011ஆம் ஆண்டு பூர்த்தி செய்தார். 2011ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகளையும், 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தக்கு எதிராக 2 விக்கெட்டுகளையும், 2013ஆம் ஆண்டு மீண்டும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 7 விக்கெட்டுகளையும், 2016ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 12 விக்கெட்டுகளையும் அஸ்வின் கைப்பற்றியுள்ளார்.

Recommended Video

IND vs NZ 2வது Test நடைபெறுமா? Mumbai weather forecast | Oneindia Tamil
உறுதியாகிவிடும்

உறுதியாகிவிடும்

மொத்தம் 4 டெஸ்ட்டில் 30 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் கண்டிப்பாக அணியில் இருக்க வேண்டும். அப்படி அஸ்வினை விராட் கோலி நீக்கினால், இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பது உண்மையாகிவிடும். இதனால் விராட் கோலி அணியை எப்படி தேர்வு செய்ய உள்ளார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

Story first published: Thursday, December 2, 2021, 12:48 [IST]
Other articles published on Dec 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+