Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL SRH vs RR - வீரர்களுக்கு கருப்பு பேட்ஜ் அணிந்தது ஏன்? யாருக்காக 2 நிமிட மவுன அஞ்சலி?

ஐதராபாத் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணி எதிரான ஆட்டத்தில் கிரிக்கெட் வீரர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். மேலும் போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணி வீரர்களும் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதற்கு காரணம் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சலீம் துரானி இன்று காலமானார். ஆனால் இவர் பிறந்தது ஆப்கானிஸ்தான். ஆனால், இவர்களது குடும்பம் அப்போதே இந்தியா வந்து தங்கினர். துராணி கவாஸ்கருக்கு முன்பு இருந்த காலக் கட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடியவர்.

why cricketers Wearing black badge today in ipl games - remembering salim durani

இந்திய அணிக்காக 13 ஆண்டுகளில் 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இடது கை சுழற்பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேனாக சலிம் துராணி விளங்கி இருக்கிறார். சலீம் துராணி அந்த காலத்திலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் சிக்சர் அடிப்பதில் பெயர் போனவர். 1961ஆம் ஆண்டு இவருடைய பங்களிப்பால் தான் இங்கிலாந்து அணியை இந்தியா டெஸ்ட் தொடரில் வீழ்த்தியது.

இந்தியாவுக்காக பேட்டிங்கில் 1202 ரன்களும், பந்துவீச்சில் 74 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜூனா விருதை வென்ற முதல் கிரிக்கெட் வீரர் என்றால் பார்த்து கொள்ளுங்கள். இவருடைய சாதனையை பாராட்டி 2011ஆம் ஆண்டு சலீம் துராணிக்கு பிசிசிஐ சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சலீம் துராணி மறைவுக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, April 2, 2023, 16:02 [IST]
Other articles published on Apr 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+