Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பின்னணியில் நடந்து டீலிங்.. ராபின் உத்தப்பாவை விடாப்பிடியாக கேட்டு வாங்கிய தோனி.. பரபரப்பு காரணம்!

சென்னை: மூத்த வீரர் ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே அணி திடீரென வாங்கியது ஏன் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

2021 ஐபிஎல் தொடருக்கும் 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. புது புது வீரர்களை அணியில் எடுத்து, சிறப்பான அணியை உருவாக்கும் திட்டத்தில் ஐபிஎல் அணிகள் களமிறங்கி உள்ளது.

ஆனால் சிஎஸ்கே அணி எப்போதும் போல இந்த முறையும் வயதான வீரர்களை அணியில் எடுத்து வருகிறது. இளம் வீரர்களை குறி வைக்காமல் வயதான வீரர்களை சிஎஸ்கே குறி வைக்க தொடங்கி உள்ளது.

மாற்றம்

மாற்றம்

இந்த நிலையில் ராஜஸ்தான் அணியில் ஆடி வந்த மூத்த வீரர் ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே அணி டிரேடிங் செய்து வாங்கியுள்ளது. ராஜஸ்தான் அணியில் இவர் 3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் அதே தொகையை கொடுத்து சிஎஸ்கே இவரை வாங்கி உள்ளது. சிஎஸ்கே ரசிகர்களை இந்த சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

சிஎஸ்கே அணி இளம் வீரர்களை குறி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படி மூத்த வீரர்களை மீண்டும் தேடி செல்வது ஏன் என்று கேள்வி எழுந்தது. அதுவும் கடந்த 4 வருடமாக பார்மில் இல்லாத ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே தேடி சென்றது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

ஏன்

ஏன்

இதற்கு காரணம் ராபின் உத்தப்பாவின் தற்போதைய பார்ம்தான் காரணம் என்கிறார்கள். ராபின் உத்தப்பா கடந்த ஐபிஎல்லில் சரியாக ஆடாமல் போனதற்கு அமீரக பிட்ச்தான் காரணம். இந்த முறை ஐபிஎல் இந்தியாவில் நடக்கிறது. அதிலும் சென்னையில் நடக்கும் 8 போட்டியில் உத்தப்பா சிறப்பாக ஆடுவார் என்று கூறப்படுகிறது .

புதிய அணி

புதிய அணி

2022ல் பெரிய ஏலம் நடக்கும். அப்போது புதிய வீரர்களை எடுக்கலாம். அதற்கு முன்பு இந்த வருடம் கொஞ்சம் அனுபவ வீரர்களை வைத்து ஆடலாம் என்று சிஎஸ்கே நினைக்கிறது. கேரள அணிக்காக இந்த முறை சையது முஷ்டாக் கோப்பை தொடரில் ராபின் உத்தப்பா நன்றாக ஆடினார். இந்த தொடரில் ராபின் உத்தப்பா நல்ல பார்மில் இருந்தார்.

பார்ம்

பார்ம்

பல்வேறு போட்டிகளில் கேரளாவின் வெற்றிக்கு அவர் காரணமாக இருந்தார். இதுவும் கூட தோனி ராபின் உத்தப்பாவை குறி வைக்க காரணம் என்கிறார்கள். இதனால் உத்தப்பா வேண்டும் என்பதில் தோனி உறுதியாக இருந்துள்ளார். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்பே ராபின் உத்தப்பாவை டிரேட் செய்யும் டீலிங் நேற்று முடிந்தது என்கிறார்கள்.

Story first published: Friday, January 22, 2021, 10:02 [IST]
Other articles published on Jan 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+