For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்போ வேண்டாம்.. கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய தோனி.. தப்பித்த தலைகள்.. சிஎஸ்கேவில் நடப்பது என்ன?

சென்னை: சிஎஸ்கே அணியில் பல வீரர்கள் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில வீரர்கள் மட்டும் வெளியேற்றப்பட்டது ஏன் என்று கேள்வி எழுந்தது.

2021 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. வரும் பிப்ரவரி 11ம் தேதி ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடக்க உள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் தாங்கள் ரிட்டென்சன் செய்ய விரும்பும் வீரர்களையும், ரிலீஸ் செய்ய விரும்பும் வீரர்களையும் பற்றிய லிஸ்டை நேற்று வெளியிட்டது. பல முக்கிய அணிகள் நிறைய வீரர்களை ரிலீஸ் செய்து ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

சிஎஸ்கே அணியில் பல வீரர்கள் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில வீரர்கள் மட்டும் வெளியேற்றப்பட்டது ஏன் என்று கேள்வி எழுந்தது. 2020 ஐபிஎல் தொடரில் சென்னை அணி சரியாக ஆடவில்லை. இப்படி இருக்கும் போது சிஎஸ்கேவில் இந்த வருடம் நிறைய மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எத்தனை

ஆனால் எத்தனை

ஆனால் சிஎஸ்கேவில் இருந்து வெறும் 5 வீரர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற வாட்சனையும் சேர்த்து 6 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நிறைய வீரர்கள் நீக்கப்படாமல் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன்படி சிஎஸ்கேவில் இருந்து கேதார் ஜாதவ், முரளி விஜய், பியூஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங், மோனு சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இது போக வாட்சன் ஓய்வு பெற்றுள்ளார்.

தொடர்வார்கள்

தொடர்வார்கள்

இந்த 6 பேர் போக சிஎஸ்கேவின் முக்கியமான வீரர்களான சுரேஷ் ரெய்னா, டு பிளசிஸ், பிராவோ, தோனி, ஜடேஜா, சாம் கரன், கெய்க்வாட், என் ஜெகதீசன், கே. எம் ஆசிப், ஹஸல்வுட், கே சர்மா, இம்ரான் தாஹிர், மிட்சல் சான்டர், சாய் கிஷோர், அம்பதி ராயுடு, ஷரத்துல் தாக்கூர், தீபக் சாகர் ஆகியோர் அணியில் தொடர்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஏன்

ஏன்

சிஎஸ்கே அணி முக்கியமான விஷயம் ஒன்றை கருத்தில் கொண்டுதான் இப்படி பல வீரர்களை வெளியே விடவில்லை என்று கூறுகிறார்கள். தற்போது சிஎஸ்கேவில் ஓப்பனிங் இறங்க கெய்க்வாட், டு பிளசிஸ் உள்ளனர். இன்னும் ஒரு வீரரை ஏலத்தில் எடுத்துக்கொள்ள முடியும். ஒரு வெளிநாட்டு வீரரை ஏலத்தில் எடுத்துக் கொள்ள முடியும்.

மற்ற வீரர்கள்

மற்ற வீரர்கள்

மற்றபடி மிடில் ஆர்டரில் ஆட கேதார் ஜாதவிற்கு பதிலாக புதிய மிடில் ஆர்டர் வீரரை கொண்டு வரலாம். மற்றபடி ரெய்னா, அம்பதி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கரண், பிராவோ என்று வலிமையான பேட்டிங் ஆர்டர் தற்போதும் சிஎஸ்கேவிடம் உள்ளது. டு பிளசிஸ், சாம் கரன், பிராவோ, இம்ரான் தாஹிர் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் சிஎஸ்கே அணியில் ஆட வாய்ப்புள்ளது.

பவுலர்கள்

பவுலர்கள்

பவுலர்கள் என்று பார்த்தால் ஷரத்துல் தாகூர், இம்ரான் தாஹிர், சாகர் உள்ளனர். இன்னும் கூடுதலாக ஹசல்வுட் போன்ற முரட்டு பவுலர்களும் உள்ளனர். ஹர்பஜன், சாவ்லா போன்றவர்களுக்கு மாற்றாக நல்ல இந்திய ஸ்பின் பவுலர்களை களமிறக்கினால் சிஎஸ்கே இன்னும் வலிமை பெறும்.

மாற்றும்

மாற்றும்

2022 ஐபிஎல்லில் அணிகள் எல்லாம் கலைக்கப்பட்டு மொத்தமாக புதிய ஏலம் நடக்கும். இதனால் இப்போது அணியில் பெரிய மாற்றம் செய்ய தோனி விரும்பவில்லை. 5 பேரை மாற்றினால் போதும். மிடில் ஆர்டருக்கும், ஓப்பனிங்கிற்கும், ஸ்பின் பவுலிங்கிற்கும் இரண்டு பேரை எடுத்தால் போதும் என்ற திட்டத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இருக்கிறார் என்கிறார்கள்.

Story first published: Thursday, January 21, 2021, 9:47 [IST]
Other articles published on Jan 21, 2021
English summary
Why CSK released very less number of players ahead of IPL 2021 mini auction?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+