Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

12 WIDE வீசிய சிஎஸ்கே வீரர்கள்.. தோனி கோபப்படாமல் இருந்ததற்கு காரணம் இது தான்.. செம திட்டம்!

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டத்தில் அதுவும் இலக்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்ட போது பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து Wide ஆக வீசினால் நமக்கு எவ்வளவு கோபம் வரும்.

ஆனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, பாட்ஷா படத்தில் ரஜினியை கம்பத்தில் வைத்து அடிக்கும் போது எப்படி அவர் சிரிப்பாரோ, அதேபோல் கூலாக நின்றார்.

 Why Dhoni remains silent despite csk bowled too much wide deliveries

இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இவ்வளவு wide வீசியும் தோனி ஏன் பந்துவீச்சாளர்களை திட்டவில்லை என்று கேள்வி கேட்டு வருகின்றனர். அதற்கு ஒரு சூப்பர் காரணம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.சென்னை ஆடுகளம் மிகவும் தோய்வாக இருந்தது. இதனால் நாம் எவ்வளவு வேகமாக அடித்தாலும் பந்து சிக்ஸர்க்கு போவது கடினம்.

இந்த நிலையில் சிஎஸ்கே நேற்று ஒரு திட்டத்தை கையாண்டது. அதாவது பந்தை நன்றாக Wide யாக்கர் லென்தில் வீசி, அதனை குஜராத் அணி வீரர்கள் அடிக்கும் வகையில் செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது அது பவுண்டரி லைனில் நிற்கும் ஃபில்டர்களிடம் நேராக செல்லும். இந்தத் திட்டத்தை தான் நேற்று சிஎஸ்கே வீரர்கள் வகுத்தார்கள். இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் போது பலபந்து வைடாக போக வாய்ப்பு இருக்கிறது.

நேற்று மட்டும் சிஎஸ்கே 12 Wide பால்களை வீசினார்கள். இதில் தீபக்சாஹர் மூன்றும், துஷார் தேஷ் பாண்டே இரண்டு முறையும் ,மகிஷா பதிரானா 7 முறையும் wide வீசினார்கள். இதில் பதிரானா சில பந்தை தவறாக தான் வீசினார். எனினும் தோனி அவர்களை திட்டவில்லை. காரணம் திட்டத்தை செயல்படுத்தும் போது தவறு நிகழும் என்று அவருக்கு தெரியும்.

மேலும் களத்தில் பந்துவீச்சாளர்களை திட்டினால் அவர்கள் பதற்றப்பட நேரிடும். இதன் மூலம் திட்டத்திலிருந்து பின்வாங்கி சாதாரண பந்துகளை வீசி அது ரன்களுக்குச் செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் தான் நேற்று தோனி புத்தர் போல் அமைதியாக காட்சி அளித்தார். இது போன்று Wide யாக்கர்களை வீசுவதில் கைதேர்ந்தவர் பிராவோ.எனவே இந்த திட்டத்திற்கு பின்னால் பிராவோவின் பங்கும் இருந்திருக்கலாம்.

Story first published: Wednesday, May 24, 2023, 21:15 [IST]
Other articles published on May 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+