
டோணி
டோணி இல்லாமல் உடை மாற்றும் அறை பழைய மாதிரி இல்லை. அவர் எங்களுடன் சேர்ந்து டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று நினைக்கையில் ஏதோ மாதிரியாக உள்ளது.

சச்சின்
சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபோதும் இது போன்று தான் இருந்தது. இத்தனை ஆண்டுகளாக சச்சினுடன் பேசி, கருத்து கேட்டு, விளையாடிவிட்டு திடீர் என அவர் இல்லாத அணி வெறுமையாக இருந்தது.

கோஹ்லி
டோணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடாவிட்டாலும் அவர் எங்களுக்கு கூறிய அறிவுரைகள் எங்கள் மனதில் இருக்கும். உடை மாற்றும் அறையில் டோணியின் குரல் கேட்பது போன்றே உள்ளது என்றார் கோஹ்லி.

ஓடிஐ
நாளை தொடங்க உள்ள வங்கதேசத்திற்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு டோணி தலைமை தாங்குவார். கோஹ்லி துணை கேப்டனாக இருப்பார்.


Click it and Unblock the Notifications











